இன்று பணவரவால் சந்தோசப்படும் ராசிக்காரர் நீங்களா

11
11
  • மேஷ ராசிக்காரர்களுக்கு  பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. தேவைகள் பூர்த்தி ஆகும் நாள்.

  • ரிஷப ராசிக்காரர்களுக்கு  குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
  • மிதுன ராசிக்காரர்களுக்கு  கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். முகப்பொலிவு கூடும். நேர்மறை எண்ணம் பிறக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும்.உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.
  • கடக ராசிக்காரர்களுக்கு  ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில்எடுத்து கொண்டு இருக்காதீர்கள். மற்றவர்கள் பிரச்சினையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு   குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்து போகும்.அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடையலாம். அசதி சோர்வுவந்து நீங்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுகப்பிரச்சினைகள் வந்து போகும்.போராடி வெல்லும் நாள்.

  • கன்னி ராசிக்காரர்களுக்கு   குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பணவரவு உண்டு. நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். உறவினர்கள் உங்களின் சகிப்பு தன்மையை பாராட்டுவார்கள். வியாபாரத்தில் விஐபிகளும் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் மரியாதை கூடும். இனிமையான நாள்.
  • துலாம் ராசிக்காரர்களுக்கு  எதையும் சாதிக்கும்தன்னம்பிக்கை வரும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள்.
  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு   குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள்.எதிர்பாராத இடத்திலிருந்துஉதவிகள்கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில்முக்கிய முடிவுகள்எடுப்பீர்கள். தடைகள் உடைபடும் நாள்.
  • தனுசு ராசிக்காரர்களுக்கு   சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சாதாரணமாகப் பேசுவதைக்கூட சிலர் தவறாகப் புரிந்துகொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.
  • மகர ராசிக்காரர்களுக்கு   தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில்நன்மை உண்டு. மனைவி வழியில்ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். எதிர்பாராத நன்மை உண்டாகும் நாள்.
  • கும்ப ராசிக்காரர்களுக்கு  குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வரும். வீட்டை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சாதிக்கும் நாள்.

  • மீன ராசிக்காரர்களுக்கு   புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உங்களுடன் இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.