இன்று முன்கோபத்தை குறைக்க வேண்டிய ராசிக்காரர் யார் தெரியுமா

13
13
  • மேஷ ராசிக்காரர்களுக்கு மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.
  • ரிஷப ராசிக்காரர்களுக்குகடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
  • மிதுன ராசிக்காரர்களுக்கு உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பழைய பிரச்னைகளில் ஒன்று தீரும். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்க
    மாவீர்கள். வெற்றி பெறும் நாள்.
  • கடக ராசிக்காரர்களுக்கு உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உற்சாகமான நாள்.
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். பொறுமை தேவைப்படும் நாள்.
  • கன்னி ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடன் பிரச்சினையைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். உறவினர் நண்பர்களுடன் வீண் விவாதம் வந்து போகும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.
  • துலாம் ராசிக்காரர்களுக்கு நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். சிறப்பான நாள்.
  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.
  • தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சாதிக்கும் நாள்.
  • மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். யோகா தியானம் என மனம் செல்லும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள்.
  • கும்ப ராசிக்காரர்களுக்கு கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். புது நட்பு மலரும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் உதவிகள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். நல்லன நடக்கும் நாள்.
  • மீன ராசிக்காரர்களுக்கு சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களால் முடிந்தவற்றை செய்து கொடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.