இன்று பணப்புழக்கம் அதிகரிக்கும் ராசிக்காரர் நீங்களா?

20
20
  • மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து போகும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் ஈகோ பிரச்சினைகள் வந்துநீங்கும்.இடம்பொருள்ஏவல்அறிந்துசெயல்பட வேண்டிய நாள்.
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
  • மிதுன ராசிக்காரர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் நவீன உத்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது  துலங்கும் நாள்.
  • கடக ராசிக்காரர்களுக்கு குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். யோகா தியானத்தில் மனம் செல்லும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.  உழைப்பால் உயரும் நாள்.
  • கன்னி ராசிக்காரர்களுக்கு உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரி உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
  • துலாம் ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புது நட்பு மலரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.
  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
  • தனுசு ராசிக்காரர்களுக்கு கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
  • மகர ராசிக்காரர்களுக்கு எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.
  • கும்ப ராசிக்காரர்களுக்கு உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உறவினர் நண்பர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.
  • மீன ராசிக்காரர்களுக்கு கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நட்பு வட்டம் விரயம். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.