இன்றைய நாள் எப்படி அமைந்திருக்கு!

29
29
 • மேஷ ராசிக்காரர்கள் குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மதிப்பார்கள். உத்தியோகத்தில் இழந்த உரிமை பெறுவீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.
 • ரிஷப ராசிக்காரர்கள் ராசிக்குள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும் பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். இரண்டாம் முயற்சியில் சில காரியங்கள் முடியும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களை தாண்டி முன்னேறுவீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
 • மிதுன ராசிக்காரர்கள் கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில்போட்டிகளைசமாளிப்பீர்கள். கவனம் தேவைப்படும் நாள்.
 • கடக ராசிக்காரர்கள் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நட்பு
  கிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில்தைரியமாகமுக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உற்சாகமான நாள்.
 • சிம்ம ராசிக்காரர்கள்  எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் சந்திப்பு நிகழும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.
 • கன்னி ராசிக்காரர்கள் பிரச்சினையின் ஆணி வேரை கண்டவர்கள். பிள்ளை களை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். திட்டம் நிறைவேறும் நாள்.
 • துலாம் ராசிக்காரர்கள் சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். முன்கோபத்தை குறையுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.
 • விருச்சிக ராசிக்காரர்கள் கணவன்- மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். தாயாரின் உடல் நிலை சீராகும். புதுநட்பு மலரும். வாகன வசதிப்பெருகும். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நட்புகிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மகிழ்ச்சியான நாள்.
 • தனுசு ராசிக்காரர்கள் குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
 • மகர ராசிக்காரர்கள் குடும்பத்தில் உங்கள் கைஓங்கும். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள்யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம் பக்கம்ட்டாரின்ஆதரவு பெருகும். புது பொருட்கள் வந்து சேரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
 • கும்ப ராசிக்காரர்கள் புதிய கோணத்தில்  சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

 • மீனம் ராசிக்காரர்கள் கம்பீரமாகப் பேசி சில காரியங்களை சாதிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக் கட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.