இன்று கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும் ராசிக்காரர் நீங்களா

07
07
  • மேஷ ராசிக்காரர்கள் குடும்பத்தினருடன் உங்கள் நேரத்தை செலவழிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள்.
  • ரிஷப ராசிக்காரர்கள் தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். புது வேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
  • மிதுன ராசிக்காரர்கள் குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள்.உத்தியோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள் .நினைத்ததை முடிக்கும் நாள்.
  • கடக ராசிக்காரர்கள் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புதிதாக ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நல்லது நடக்கும் நாள்.
  • சிம்ம ராசிக்காரர்கள் உங்கள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டு விட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
  • கன்னி ராசிக்காரர்கள் கணவன்- மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
  • துலாம் ராசிக்காரர்கள் உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்கும் படி நடந்து கொள்வீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீரென்று அறிமுகமாகும் நபரால் பயனடைவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். லாபம் பெருகும் நாள்.
  • விருச்சிக ராசிக்காரர்கள் சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். புதிய முயற்சியில் வெற்றி கிட்டும் நாள்.
  • தனுசு ராசிக்காரர்கள்  உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில்தலைமையின் ஆதரவு கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
  • மகர ராசிக்காரர்கள் சந்திராஷ்டமம் இருப்பதால் தன்னம்பிக்கை குறையும். உறவினர் நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். வியாபாரத்தில் சில இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.
  • கும்ப ராசிக்காரர்கள் பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழியில் உறவினர்கள் மதிப்பார்கள். புது நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் முடியும் நாள்.
  • மீன ராசிக்காரர்கள் எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.