இன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமைந்திருக்கு

11
11
  • மேஷ ராசிக்காரர்களுக்கு குடும்பத்தினருடன் விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.
  • மிதுன ராசிக்காரர்களுக்கு புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.
  • கடக ராசிக்காரர்களுக்கு எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில்சூட்சுமங்களை உணர்வீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். தைரியம் கூடும் நாள்.
  • கன்னி ராசிக்காரர்களுக்கு குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.
  • துலாம் ராசிக்காரர்களுக்கு ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் மறதியால்பிரச்சினை வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும்.  தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
  • தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்பத்தாருடன் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டு வார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.
  • மகர ராசிக்காரர்களுக்கு கடந்த கால சுகமான அனுபவங்களை சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
  • கும்ப ராசிக்காரர்களுக்கு  உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். புனிதஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். புதிய பாதை தெரியும் நாள்.

  • மீனம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்கி இருப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி மனச்சோர்வு வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.