இன்று கணவன்- மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும் ராசிக்காரர் நீங்களா

25
25
  • மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று  ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
  • ரிஷப ராசிக்காரர்கள் இன்று கணவன்- மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. உறவினர்களால் மன சங்கடங்கள் வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
  • மிதுன ராசிக்காரர்கள் இன்று உங்களின் இலக்கை நோக்கி முன்னறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.  வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். பயணங்களால் பயனடை வீர்கள். வியாபாரத்தில்  புதுதொழில் தொடங்கும் முயற்சி வெற்றியடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

  • கடக ராசிக்காரர்கள் இன்று எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடந்துக் கொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றைவிட்டுக் கொடுப்பீர்கள்.  வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டு வார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • சிம்ம ராசிக்காரர்கள் இன்று குடும்பத்தாரின் விருப் பங்களை நிறைவேற்றுவீர்கள்.  மற்றவர்களுகாக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.  உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மரியாதை கூடும்.  புதிய பாதை தெரியும் நாள்.

  • கன்னி ராசிக்காரர்கள் இன்று சந்திராஷ்டமம் இருப் பதால் இனந்தெரியாத சின்ன சின்னகவலைகள் வந்து போகும். அவசரப் பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். நன்றி மறந்த ஒருவரைநினைத்து வருத்தம் அடைவீர்கள். வியாபா ரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.
  • துலாம் ராசிக்காரர்கள் இன்று தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடு வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ் வீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபா ரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு.  உத்தி யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நல்லன
    நடக்கும் நாள்.

  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண் பர்கள் உங்களை கலந்தா லோசித்து சில முடிவுகள் எடுப்பார் கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். அமோகமான நாள்
  • தனுசு ராசிக்காரர்கள் இன்று குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புதுத் தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
  • மகர ராசிக்காரர்கள் இன்று எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். புது வேலை கிடைக்கும். பழையகடனைத் தீர்க்க முயற்சி செய் வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னைகள் தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை நடக்கும் நாள்.
  • கும்ப ராசிக்காரர்கள் இன்று குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனைகள் ஏற்கப்படும். மகிழ்ச்சியான நாள்.
  • மீனராசிக்காரர்களுக்கு இன்று கணவன்- மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். தோற்றப்பொலிவு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள்  பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின்ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.