இன்று கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும் ராசிக்கார் நீங்களா

01
01
  • மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பால்ய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
  • ரிஷப ராசிக்காரர்கள் இன்று துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
  • மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தோற்றப் பொலிவு கூடும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
  • கடக ராசிக்காரர்களுக்கு இன்று ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகள் தவறுகளை சுட்டிக்காட்டினால் அதனை மாற்றிக் கொள்வது நல்லது. பதறாமல் பக்குவமாகசெயல்பட வேண்டிய நாள்.
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் ஆரோக்கியமான விவாதங்கள் வரப்படும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. விழிப்புடன் இருக்க வேண்டிய நாள்.
  • கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். புது வேலை கிடைக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். இனிமையான நாள்.
  • துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் அணுகு முறையை மற்றவர்களுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்று வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ் கௌரவம் கூடும் நாள்.
  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
  • தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய பிரச்சினைகள் நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில்  சக ஊழியர்களை கடிந்து கொள்ளாதீர்கள். எச்சரிக்கை தேவைப்படும் நாள்.
  • மகர ராசிக்காரர்களுக்கு இன்று பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகனத்தை சரி செய்வீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். நன்மை கிட்டும் நாள்.
  • கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
  • மீன ராசிக்காரர்களுக்கு இன்று  புதிய திட்டங்கள் நிறை வேறும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.