இன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமைந்திருக்கு

30
30
  • மேஷராசிக்காரர்கள் இன்று தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில்  ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கனிவாகப்பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர் களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.
  • மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் நல்ல செய்தி கேட்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.
  • கடக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்கள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப் பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார் கள். தடைகளை தாண்டி வெல்லும் நாள்.
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறும் நாள்.
  • கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அழகும் இளமையும் கூடும். வெளிவட்டாரத் தில் புது அனுபவம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும் .  உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.  மனசாட்சிபடி செயல்படும் நாள்.
  • துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். பணியில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணதாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிருப்தி உண்டாகும். கவனம் தேவைப்படும் நாள்.
  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கணவன்-மனைவிக் குள் அனுசரித்துப் போவது நல்லது. திடீர்  பயணங்கள் மற்றும் செலவுகளால் திணறுவீர்கள். உறவினர்களால் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப்பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். போராடி வெல்லும் நாள்.
  • தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மிகப்  பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப் படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள்.  உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகள் பலிதமாகும். லாபம் பெரும் நாள்.
  • மகர ராசிக்காரர்களுக்கு இன்று சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர் களால் அனுகூலம் உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். நன்மை நடக்கும் நாள்.
  • கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலம் சென்று வருவீர்கள். வியாபா ரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய மாற்றம் ஏற்படும் நாள்.
  • மீன ராசிக்காரர்களுக்கு இன்றுசந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகமாகும்.யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. கவனம் தேவைப்படும் நாள்.