- மேஷ ராசிக்காரர்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும் . சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
- ரிஷப ராசிக்காரர்கள் ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர் கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.
- மிதுன ராசிக்காரர்கள்பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
- கடக ராசிக்காரர்கள்சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள் வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள்.
- சிம்ம ராசிக்காரர்கள் கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அழகும் இளமையும் கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். விலகிநின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். நன்மை நடக்கும் நாள்.
- கன்னி ராசிக்காரர்கள்ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து போகும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களுடன் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் அதிகாரியிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
- துலாம் ராசிக்காரர்கள் குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துபோகும். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனசை வாட்டும். உறவினர்களுடன் பகைமை வந்து செல்லும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி இழப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
- விருச்சிக ராசிக்காரர்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். புகழ் கௌரவம் கூடும் நாள்.
- தனுசு ராசிக்காரர்கள் சின்ன சின்ன சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள் . நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நெருங்கியவர்களுக் காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். சாதிக்கும் நாள்.
- மகர ராசிக்காரர்கள் குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டாரத்தில் புதுஅனுபவம் உண்டாகும். கைமாற் றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.
- கும்ப ராசிக்காரர்கள் சந்திராஷ்டமம் இருப்பதால் மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகளும் நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். கவனம் தேவைப்படும் நாள்.
- மீன ராசிக்காரர்கள் எதையும் தன்னம்பிக்கையு டன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் அடைவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.