- மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனம் தொந்தரவு தரும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் வேலை ஆட்களால் பிரச்சினை வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் விவாதம் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
- ரிஷபம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோருடன் மனம் விட்டு பேசுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். மதிப்புக் கூடும் நாள்.
- மிதுனம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள் . உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு.சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். செல்வாக்கு உயரும் நாள்.
- கடகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். புதிய மாற்றம் ஏற்படும் நாள்.
- சிம்மம்: சந்திராஷ்டமம் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.
- கன்னி: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
- துலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்துவேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
- விருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.
- தனுசு: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
- மகரம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தைரியம் கூடும் நாள்.
- கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள்.
- மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். யாரை நம்புவது என்கிற குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.