மேஷம்: எதிர்காலம் பற்றிய பயம் வீண் டென்ஷன் வந்து செல்லும். பிள்ளைகளின் பிடிவாதத்தை அனுசரணையான பேச்சால் சரி செய்யுங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். கவனம் தேவைப்படும் நாள்.
ரிஷபம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும் எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்பு கூடும்நாள்.
மிதுனம்: உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு . உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதித்துக் காட்டும் நாள்.
கடகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புதியவர்களின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். புண்ணிய ஸ்தலம் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
சிம்மம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துபோவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.
கன்னி: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
துலாம்: அரசால் அனுகூலம் உண்டு. மற்றவர்களால் பயனடைவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள் . திடீர் யோகம் கிட்டும் நாள்.
விருச்சிகம்: உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் நெளிவுசுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்
தனுசு: திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி முடியும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாருக்கு மருத்துவ செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.
மகரம்: உடன்பிறந்தவர்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார் கள். அரசால் ஆதாயம் உண்டு. துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். வெற்றிக்கு வித்திடும் நாள் .
கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். மகிழ்ச்சியான நாள்.
மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தோல்வி மனப்பான்மையால் மன இறுக்கம் அதிகரிக்கும். மற்றவர்களுக்காக நியாயம் கேட்கப் போய் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.