- மேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
- ரிஷபம்: பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள் . புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.
- மிதுனம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள் . எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
- கடகம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக்கொள்வார்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள் . வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.
- சிம்மம்: இதுவரை இருந்த காரியத்தடைகள் நீங்கும் . குடும்பத்தில் அமைதியான சூழல் நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்குவரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும் . உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மாற்றம் ஏற்படும் நாள்.
- கன்னி: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். நண்பர்கள் உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும் . வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். கவனமாக இருக்க வேண்டிய நாள்.
- துலாம்: சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தில் அதிக கவனம் தேவை. வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம்.பொறுமைத் தேவைப்படும் நாள்.
- விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள் . வேற்றுமதத்தவர் உதவுவார் . வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள் . இனிமையான நாள்.
- தனுசு: பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்
- மகரம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணவரவு திருப்தி தரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். நல்லன நடக்கும் நாள்.
- கும்பம்: சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சிறுவார்த்தைகள் கூட பெரிய தகராறில்போய் முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை குறை கூறிக் கொண்டிருக்க
வேண்டாம். கவனம் தேவைப்படும் நாள். - மீனம்: சவாலாக தெரிந்த சில வேலைகள் சாதாரணமாக முடியும்.மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.