இன்றைய(04.01.2020) நாள் உங்களுக்கு எப்படி

BPiclh8ginrayarasipalan211152 2
BPiclh8ginrayarasipalan211152 2

மேஷம்

ராசிக்குள் சந்திரன் இருப்ப தால் மற்றவர்களை அனுசரித்துப் போகவும். மற்றவர்களுடன் உங் களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். கவனமு டன் செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்

கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண் டாம். சகோதரி வகையில் மனஸ் தாபங்கள் வந்து நீங்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

மிதுனம்

சமயோசிதமாகவும் சாமர்த்தியமாகவும் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். பிள்ளைகள் உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இனிமையான நாள்.

கடகம்

பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக செலவு செய்து பெருமைப் படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

சிம்மம்

கோபத்தை கட்டுப்படுத்தி வாழ்வில் உயர்வதற்கான வழியையோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வீடு வாகனத்தை சரி செய்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள் வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.

கன்னி

சந்திராஷ்டமம் தொடர்வதால் முன்கோபத்தை குறையுங் கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். உத்தி யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக்காட்ட வேண் டாம். விழிப்புடன் இருக்க வேண்டிய நாள்.

துலாம்

கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட் பால் உற்சாகமடைவீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப் படுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நல்லதே நடக்கும் நாள்.

விருச்சிகம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்துபிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

தனுசு

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்து வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

மகரம்

சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். வீடு வாகனப்பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மகளுக்கு நல்லவரன் அமையும். பணப்பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

கும்பம்

குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் லாபம் உயரும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். சாதிக்கும் நாள்.

மீனம்

கணவன் – மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவு எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப் பீர்கள். மகிழ்ச்சி கிட்டும் நாள்