இன்றைய நாள்(07.01.2020)உங்களுக்கு எப்படி?

b2732a35c805abca7aedf77213b8e9ce
b2732a35c805abca7aedf77213b8e9ce

மேஷம்

கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். விசேஷங்களை முன் னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர் பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலர் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்

சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும்.வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கடகம்

தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

சிம்மம்

உங்கள் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கன்னி

கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் மதிப்பு மரியாதை உயரும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

துலாம்

சந்திராஷ்டமம் தொடர்வதால் மனஇறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி குறை கூறு வார்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

விருச்சிகம்

கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப்பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

தனுசு

எதிர்பார்ப்புகள் நிறை வேறும் எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அமைதியான நாள்.

மகரம்

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் நட்பு உண்டாகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

கும்பம்

எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புதிய வேலைவாய்ப்பு முயற்சிகள் கைகூடும். வீட்டிற்கு கலைப் பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவு வார்கள்.உத்தியோகத்தில் அமைதி நிலவும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மீனம்

குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துக்கள் வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும்.உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகள் எடுக்கும் நாள்.