தடைகள் நீங்கும் இன்றைய ராசி பலன்!

2020 01 03 at 00 29 44 265x198
2020 01 03 at 00 29 44 265x198

மேஷம்

கிடைக்கும் வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் சரியாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். பெற்றோர் நண்பர்கள் உதவிக்கரமாக இருப்பார்கள். மனைவி வழியில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். நல்லது நடக்கும் நாள்.

ரிஷபம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தேவையான உதவிகள் கேட்ட இடத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய தொடர்புகளால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சாதகமாக செயல்படுவார். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.

மிதுனம்

சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் எதிர்பார்ப்புகள் அனைத்தும் தாமதமாகும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சாலைகளை கவனமாக கடந்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் எதிலும் கவனம் தேவை. முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

கடகம்

கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத்தருவார்கள். நன்மை கிட்டும் நாள்.

சிம்மம்

பணப் புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக்கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் வரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். வெற்றி கிட்டும் நாள்.

கன்னி

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிந்து முன்னேற்றுவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

துலாம்

பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

விருச்சிகம்

திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகளை எடுத்து தைரியமாக செயல்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் மூலம் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். உயர்வு கிட்டும் நாள்.

தனுசு

கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு காண்பீர்கள். உத்தியோகத்தில் போட்டிகள் குறையும். உற்சாகமான நாள்.

மகரம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதால் தேவையற்ற சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் எதிலும் பொறுமை தேவை. இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்

எந்த காரியத்தையும் அலைந்து திரிந்து முடிக்க வேண்டி இருக்கும். உடன்பிறந்தவர்களால் வீண் அலைச்சல் உண்டாகும். தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வதால் நன்மை கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதத்தை தவிர்க்கவும். போராடி வெல்லும் நாள்.

மீனம்

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்; உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு உதவி கரமாக இருப்பார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.