இன்றைய நாள் எவ்வாறு அமையும்?

2020 01 03 at 00 29 44 265x198
2020 01 03 at 00 29 44 265x198

மேஷம்

எந்த விடயத்திலும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

ரிஷபம்

கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.

மிதுனம்

சந்திராஷ்டமம் தொடர்வதால் முன்கோபத்தை குறையுங்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டாம். எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

கடகம்

கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். உறவினர்கள் நண்பர்களால் மதிக்கப்படுவீர்கள். வேற்று மதத்தவர்கள் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவிகரமாக இருப்பார். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும். நன்மை நடக்கும் நாள்.

சிம்மம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக்கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

துலாம்

சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

விருச்சிகம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். சாதிக்கும் நாள்.

தனுசு

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புதிய முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்லசெய்தி வரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சி கிட்டும் நாள்.

மகரம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப்போங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் எதிலும் கவனம் தேவை. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்

கணவன் மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. முக்கிய கோப்புகளை கையாளும் போது கவனமுடன் செயல்படுங்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

மீனம்

சாதுர்யமாக செயல்பட்டு உங்கள் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். வியாபாரத்தில் புதிய தொழில் முயற்சிகள் பல மடங்கு லாபத்தைப் பெருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். இனிமையான நாள்.