நல்லன நடக்கும் இன்றைய ராசி பலன்

rasi
rasi

மேஷம்

கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். புதிய நண்பர்களின் வருகையால் நன்மை உண்டாகும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

ரிஷபம்

குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசி மகிழ்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

மிதுனம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். வேற்று மதத்தவர்கள் அறிமுகம் கிடைக்கும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். இனிமையான நாள்.

கடகம்

புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். பிரபலங்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். தெய்வ அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும். சாதிக்கும் நாள்.

சிம்மம்

சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்படுங்கள். தேவையற்ற கோபத்தை குறையுங்கள். உங்களுடைய பலம் பலவீனத்தை அறிந்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

கன்னி

குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெறும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகள் ஒத்துழைப்பு கிடைக்கும். நல்லன நடக்கும் நாள்.

துலாம்

கனிவாக பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். நீண்ட நாளாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். அமோகமான நாள்.

விருச்சிகம்

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பழைய கடன் பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

தனுசு

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகளால் ஆதாயம் உண்டு. நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை முடிக்க போராட வேண்டியிருக்கும். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

மகரம்

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.

கும்பம்

கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். புதிய நண்பர்களின் வருகையால் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் புது முதலீடுகளைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் இடையே மதிப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள்.

மீனம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். உங்களின் அணுகுமுறையை மாற்றுவது நல்லது. உத்தியோகத்தில் சில சூட்சு மங்களைக் கற்றுக் கொள்வீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.