இன்றைய பலன்கள் – பொறுமை தேவைப்படும் நாள்

4 rasipalan
4 rasipalan

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். மற்றவர்க ளுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்க ளின் அணுகுமுறையை மாற்றுவது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவுலாபம் வரும். உத்தியோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நிற்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் அலைச்சலும், பொறுப்புக ளும் அதிகரிக்கும். போராடி வெல்லும் நாள்.

மிதுனம்: சமயோசிதமாக சாமர்த்தி யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகள் நண்பர்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் புதிய தொழில் முயற்சிகள் வெற்றிய டையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள். இனிமையான நாள் .

கடகம்: உங்கள் காரியங்கள் அனைத்திலும் கண்ணும் கருத்து மாக செயல்பட்டு வெற்றி பெறுவீர் கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மற்றவர்க ளுக்காக சில உதவிகளைச் செய்வீர்கள். வியா பாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். எதிர்பாராத சந்திப்புநிகழும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

சிம்மம்: கோபத்தை கட்டுப்படுத்தி வாழ்வில் உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார் கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டமான நாள்.

கன்னி: சந்திராஷ்டமம் தொடர் வதால் முன்கோபத்தை குறையுங்கள். வருங்காலத்தைப் பற்றி அதிகம்கவலைப்படுவீர்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகு முறையால் முடிக்க முயற்சி செய்வீர்கள். சிலவற் றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத் தில் எதிலும் பொறுமை தேவை. கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

துலாம்: கணவன்-மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். புதிய நண்பர்களால் ஆதாயமடை வீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வேற்றுமதத்த வர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தி யோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக் கும். நன்மைகள் நடக்கும் நாள்.

விருச்சிகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.பிள்ளைகளால் சமூக அந் தஸ்து உயரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். உத்தியோகத்தில் உயர் அதி காரிகள் பாராட் டும்படி நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தொட்டது துலங்கும் நாள்.

தனுசு: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு சிறந்ததீர்வு காண்பீர்கள். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த காணும் முயற்சியில் இறங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவு வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

மகரம்: சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் தங்கள் வேலைகளை கடினமாக முயற்சி செய்து முடிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கும்பம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர் கள். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக் கும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்க மாவீர்கள். சாதிக்கும் நாள்.

மீனம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். முக்கியபிரச்சினைகளுக்கு புதிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தேவையான பொருள்களை கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சி கிட்டும் நாள்.