உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும் நாள்

Rasi Palan
Rasi Palan

மேஷம்: தைரியமாகவும் துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். சகோதரர்களால் நன்மை உண்டு. விருந்தினர்களின் வருகையால் வீடுகளைகட்டும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். முயற்சி வெல்லும் நாள்.

ரிஷபம்: உங்கள் பேச்சால் மற்றவர்களை கவர்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். அழகும் இளமையும் கூடும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மாற்றங்கள் ஏற்படும் நாள்.

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில காரியங்களை முடிக்க போராட வேண்டியிருக்கும். வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப்போவது நல்லது. முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகள் தவறுகளை சுட்டிக்காட்டினால் மாற்றிக் கொள்வது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள்.

கடகம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சலும், பிரச்னைகளும் அதிகரிக்கும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் பனிப்போர் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.

சிம்மம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோர், நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மற்றவர்களால் நீங்கள் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதி கரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமை
கள் பாராட்டப்படும். மறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

கன்னி: உங்கள் காரியத்தை முடிக்க துடிப்புடன் செயல்படுவீர்கள். சொந்த பந்தங்கள் சிலர் உங்கள் உதவி கேட்டுவருவார்கள். உங்களால் வளர்ச் சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது யுக்திகளை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாதிக்கும் நாள்.

துலாம்: கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர் வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறைகுறைகளை எடுத்துச்சொன்னால் கோபப்பட வேண்டாம். உடல் நிலையில் சிறிது பாதிப்பு வந்து நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

தனுசு: உங்களுடைய அறிவாற் றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். திறமைகள் வெளிப்படும். சகோதரர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். மனைவி வழியில் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் தேடி வரும். நன்மை நடக்கும் நாள்.

மகரம்

மகரம்: நீண்ட நாளாக வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்.உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் உங்களின் முக்கியத்துவம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சவாலான விஷயங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கும்பம்: வருங்காலத்திற்கு தேவையான திட்டத்தை யோசித்து செயல்படுவீர்கள். ஆடம்பரச் செல வுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். நீண்டநாள் பிரார்த் தனையை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதுமை படைக்கும் நாள்.

மீனம்: பழைய பிரச்னைகள் அனைத்திற்கும் சுமூக தீர்வு காண்பீர்கள். தாயாருடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். பணப் பற்றாக்குறை இருந்தாலும் தேவை யான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பங்கு பிரச்னைக்கு முடிவு காண்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.