இந்த 4 ராசிக்காரங்களுக்கு சந்திராஷ்டமம்!

4 ad 1
4 ad 1

வரப்போகிற ஏழு நாட்களில் உங்களுக்கு எப்படி இருக்கும் பிரச்சினைகள் தீருமா, புதிய வேலை கிடைக்குமா? புதிய பிரச்சினைகள் வருமா? என்று யோசிக்கிறீர்களா? நவகிரகங்களின் சஞ்சாரத்தினால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் நடைபெறும் என்பதை வார ராசிபலன்கள் மூலம் கூறியுள்ளோம் படியுங்கள். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

மேஷம் -செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த வாரம் நிறைய நல்ல விசயம் நடக்கும். காரணம் லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் சஞ்சரிக்கிறாங்க. உங்க ராசியில் சஞ்சரிக்கிற சுக்கிரன் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டை பார்க்கிறார். கணவன் மனைவி இடையே அன்பும் பாசமும் அதிகமாகும். உங்களுக்கு பணவரவு இந்த வாரம் அதிகமாக இருக்கும். உங்க நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். சுப காரியங்கள் நிறைய நடக்கும். நிறைய ஆன்மீக பயணம் போவீங்க ஆலய தரிசனம் உங்களுக்கு மனதில் அமைதியை தரும். நீங்க நீண்ட நாட்களாக நினைத்த காரியம் கைகூடி வரும். சொந்தக்காரர்கள் உங்க வீட்டிற்கு இந்த வாரம் வருவார்கள். சொத்துக்கள் வாங்க நேரம் கை கூடி வருகிறது. உங்க ராசியில் உள்ள சுக்கிரனை ஒன்பதாம் வீட்டில் உள்ள செவ்வாய் பார்ப்பதால் காதல் கை கூடி வரப்போகிறது. மனதிற்கு பிடித்த துணையை தேர்வு செய்யும் போது கவனமாக இருக்கவும். பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். நீங்க மத்தவங்களுக்கு கொடுத்த கடன்கள் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மருத்துவ செலவுகள் வரலாம். மாணவர்களுக்கு இந்த வாரம் ரொம்ப நல்ல வாரம் நினைவாற்றல் அதிகரிக்கும். தேர்வுகளை நன்றாக எழுதுவீங்க. இந்த வாரம் நீங்க விநாயகரை கும்பிடுங்க மலை போல வரும் பிரச்சினைகள் எல்லாம் தூசியாக காணாமல் போயிரும். அதிர்ஷ்ட நிறம் : மெரூன் அதிர்ஷ்ட எண்: 28 அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை

ரிஷபம் -சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த வாரம் பொருளாதார நிலை ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும். நீங்க தொட்டது எல்லாம் பொன்னாகும். தொழில் வியாபாரத்தில நல்ல லாபம் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு அலுவலகத்தில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். உங்களுடைய வேலை செய்யும் திறமையை உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். பெண்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீங்க. உங்க வேலைப்பளு குறையும். கணவன் மனைவிக்கு இடையே வீட்ல சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து போங்க. உங்க பேச்சில கோபத்தை காட்டாதீங்க நிதானமாக இருங்க. சொந்தக்காரங்களை அனுசரிச்சு போங்க. தேவையில்லாத பழிச்சொல் வரலாம் கவனமாக இருங்க. உடல் ஆரோக்கியம் இந்த வாரம் சுமாராகத்தான் இருக்கும் சாப்பாடு விசயத்தில கவனமாக இருங்க. மாணவர்கள் நல்லா படிப்பீங்க. தேர்வுகளை கவனமாக எழுதுங்க நல்ல மார்க் வரும். இந்த வாரம் நீங்க லட்சுமி ஹயக்ரீவரை கும்பிடுங்க. நன்மைகள் நடக்கும். அதிர்ஷ்ட நிறம் : குங்குமப்பூ அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை

மிதுனம் -புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட அறிவாற்றல் மிக்க மிதுனம் ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாகவே இருக்கு. பொருளாதார நிலைமை ரொம்ப நல்லா இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில சந்தோஷமாக இருப்பீங்க. பெண்களுக்கு நகை, பொருள் வாங்குவீங்க. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து போங்க ரொம்ப சந்தோஷமா இருப்பீங்க. கல்யாண பேச்சுவார்த்தைகள் உங்களுக்கு சாதகமாக முடியும். காரணம் குரு பார்வை உங்க ராசிமேல படுவதால் உங்களுக்கு குரு பலன் வந்திருச்சு. பணப்பிரச்சினைகள் தீரும். பணம் கொடுக்கல் வாங்கல் சாதகமாக முடியும். நீங்க வரவே வராதுன்னு நினைச்ச பணம் உங்க வீடு தேடி வரும். நீங்க விரோதியா நினைச்சவங்க பகையை மறந்து உங்க சொந்தக்காரங்களாக மாறுவாங்க. மாணவர்களுக்கு ரொம்ப சந்தோஷமான வாரம். குருவோட அருளினால் உதவிகள் கிடைக்கும். அதுவே உங்களை முன்னேற்ற பாதைக்கு கூட்டிட்டு போகும். சனிக்கிழமை சனிபகவானை நல்லெண்ணெய் தீபம் போட்டு கும்பிடுங்க நல்லதே நடக்கும். அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ அதிர்ஷ்ட எண்: 22 அதிர்ஷ்ட நாள் : சனிக்கிழமை

கடகம்- மனோகாரகன் சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடகம் ராசிக்காரங்களே, உங்களுக்கு இந்த வாரம் நிறைய சந்தோஷமான சமாச்சாரங்கள் நடக்கப் போகுது. பணவரவு உங்களுக்கு சுமாராக இருந்தாலும் மன நிம்மதி ஏற்படும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரிச்சு போங்க இல்லாட்டி தேவையில்லாத பிரச்சினைகள் வரும். நீங்க உங்க உடம்பை கவனமாக பாத்துக்கங்க. சூரியன் சூட்டை கிளப்பலாம். வண்டியில போறப்ப நிதானமாக போங்க. வீட்ல புருஷன் பொண்டாட்டி விட்டுக்கொடுத்து போங்க இல்லாட்டி தேவையில்லாத சண்டை சச்சரவுகள் வரும். வேலை செய்றவங்க உங்க வேலையில ரொம்ப கவனமாகவும் நிதானமாகவும் இருங்க இல்லாட்டி புரமோசன்ல உயரதிகாரிகள் கை வச்சிருவாங்க. மாணவர்கள் பெற்றவர்களுக்கும் குருவிற்கும் மதிப்பு கொடுங்க. தேர்வில நல்ல மார்க் எடுக்கலாம். மகா விஷ்ணுவை வழிபடுங்க. உங்க கஷ்டங்கள் குறையும் நிம்மதி அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச் அதிர்ஷ்ட எண் 8 அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு கிழமை

சிம்மம் – சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரங்களே, உங்ளுக்கு இந்த வாரம் யோகமான வாரமாக இருக்கும். உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்க யோகம் வந்திருச்சு அதுக்கான பேச்சுவார்தைகளை ஆரம்பிங்க. வேலை செய்றவங்களுக்கு ரொம்ப நிம்மதியான வாரம். ஆபிஸ்ல இருந்த பிரச்சினைகள் எல்லாம் தீரப்போகுது உயரதிகாரிகள் கிட்ட பேசும்போது மட்டும் ரொம்ப கவனமாக பேசுங்க. பணம் கொடுக்கல் வாங்கல் ரொம்ப திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் வந்தாலும் அதை எல்லாம் ஜஸ்ட் லைக் தட் தூசி தட்டிருவீங்க. உடம்புதான் அவ்வப்போது பிரச்சினையை ஏற்படுத்தும். மருத்துவ ஆலோசனை எடுத்துக்கங்க. வேலையில புரமோசனும் நீங்க எதிர்பார்க்கிற இடத்திற்கு இடமாற்றமும் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துங்க. நல்லா படிங்க தேர்வுகளை நல்லா எழுதுவீங்க. இந்த வாரம் நீங்க விநாயகரை கும்பிடுங்க ரொம்ப நல்லா இருக்கும். அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக் கிழமை

கன்னி – புதனை ராசி நாதனாகக் கொண்ட புத்திசாலித்தனம் மிக்க கன்னி ராசிக்காரங்களே, உங்களுக்கு இந்த வாரம் பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் உங்களுக்கு பிரச்சினைகள் குறையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். வீட்டுக்கு வர்ற சொந்தக்காரங்க கிட்ட எந்த வம்பும் வச்சிக்காதீங்க. அனுசரித்து போங்க பிரச்சினை வராது. இந்த வாரம் பணத்தை பத்திரமாக வச்சிக்கங்க புதுசா எந்த முதலீடும் வேண்டாம். தொழில் வியாபாரத்தில உங்களுக்கு லாபம் கிடைக்கும் என்றாலும் பெருசா எதையும் இன்வெஸ்ட் பண்ணாதீங்க போட்ட பணம் திரும்ப வராம போயிரும். மாணவர்களுக்கு இந்த வாரம் படிப்பில ஆர்வமும் அக்கறையும் அதிகமாகும். நல்லா படிச்சா மட்டுமே தேர்வுகளை நல்லா எழுத முடியும். வரவுக்கு மீறிய செலவுகள் வரலாம் அதுவே உங்களுடைய நிம்மதியை கெடுக்கும் கவனம். அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச் அதிர்ஷ்ட எண் 8 அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு கிழமை

துலாம்- துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த வாரம் ரொம்ப நல்ல வாரம். கணவன் மனைவி இடையே ரொம்ப சந்தோஷமாக இருப்பீங்க. ஒற்றுமை ஏற்படும். உங்க ராசி அதிபதியின் பார்வை உங்களுக்கு கிடைக்குது. ரொம்ப சுபிட்சமான வாரம். திருமணம் சுபகாரிய முயற்சிகளில் ரொம்ப சந்தோஷமாக இருப்பீங்க. திருமணம் சுபகாரியங்களுக்கு எடுக்கும் முயற்சிகள் சுபமாக நடைபெறும். உங்களுடைய பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கவனமாக இருங்க போட்டி பொறாமை ஏற்படும். தடைகள் தாண்டி நன்மைகள் நடைபெறும். குரு பகவான் உங்களுக்கு சாதகமாக இல்லை. ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் தேர்வுகளை நன்றாக எழுதுவீர்கள். சனிபகவானை வணங்குங்கள் சங்கடங்கள் தீர்ந்து நன்மைகள் நடைபெறும். அதிர்ஷ்ட நிறம் : டார்க் ப்ளூ அதிர்ஷ்ட எண்: 45 அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு கிழமை

விருச்சிகம்- செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த வாரம் பேச்சில் கோபமும் கடுமையும் இருக்கும். நிதானமாக பேசுங்க. பணவரவு அதிகமாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும். சொத்துக்கள் வாங்கலாம். கணவன் மனைவி பிரச்சினை வரலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். பேச்சில் நிதானமாக பேசுங்கள் சண்டை சச்சரவுகள் வராது. தொழில் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் லாபத்தை கொடுக்கும். வேலையில் உயரதிகாரிகளால் கெடுபிடி ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கம். வட்டிதொழில் செய்பவர்களுக்கு நன்மைகளும் லாபமும் கிடைக்கும். மாணவர்கள் பொழுதுபோக்குகளை குறைத்து படிப்பில் கவனம் செலுத்துங்கள் பவுர்ணமி தினத்தில் சிவன் கோவிலுக்கு போயிட்டு வாங்க நன்மைகள் நடைபெறும். முன்கோபத்தை கட்டுப்படுத்துங்க. நிதானமாக பேசுங்க நல்லதே நடக்கும். அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 36 அதிர்ஷ்ட நாள் : திங்கட் கிழமை


தனுசு – குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, உங்களுடைய ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்கிறார். இரண்டாம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிங்க. பண விசயத்தில் கவனமாக இருங்க. பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருங்க. யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போட்றாதீங்க. யாரை நம்பியும் பெரிய அளவில் பணத்தை கடனாக வாங்கி கொடுக்காதீங்க. வேலை செய்றவங்க கவனமாக இருங்க இல்லாட்டி தேவையில்லாத பிரச்சினையில மாட்டீப்பீங்க. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து போங்க. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருங்க. தேவையில்லாத பயணங்கள் இரவு நேர பயணங்களை தவிர்த்து விடுங்கள். வேலை செய்றவங்க அலுவலகத்தில உயரதிகாரிகள் சொல்றதை கேட்டு நடந்துக்கங்க. தேவையில்லாம வாக்குவாதம் செய்யாதீங்க. நண்பர்களே எதிரிகளாக மாறும் காலம் இது கவனமாக இருங்க. இந்த வாரம் நீங்க ஆஞ்சனேயரை வழிபடுங்க பிரச்சினைகள் பறந்து போயிரும். அதிர்ஷ்ட நிறம் : பிங்க் அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு கிழமை

மகரம்- சனி பகவானை ராசி நாதனானக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே, நீங்க ரொம்ப வெள்ளந்தியானவங்க. உங்க குணம் யாருக்கும் வராது. திடீர் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். நெருங்கியவர்களால் பிரச்சினைகள் வரலாம். நிம்மதி குறையும் வீண் அலைச்சல் ஏற்படும் கவனமாக இருங்க. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. பணவரவுகள் உங்களுக்கு நிறைய கிடைக்கும் என்றாலும் தேவையற்ற செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள். வீண் செலவுகள் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். சிக்கனமாக இருந்து பணத்தை சேமிங்க. திருமண சுப நிகழ்ச்சிகளில் தடை ஏற்படும் என்பதால் இந்தவாரம் அதற்கான முயற்சிகளை செய்யாதீங்க. தொழில் வியாபாரத்தில் போட்டிகள் ஏற்படும். கிடைத்த வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள். பயன்படுத்திக்கங்க. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க யாருக்கும் கடன் வாங்கி கொடுக்காதீங்க. காதல் விவகாரங்களில் கவனமாக இருங்க. இல்லாவிட்டால் மிகப்பெரிய ஏமாற்றாத்தை சந்திக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க. தேவையற்ற ரிஸ்க் எடுக்காதீங்க. வேலை செய்பவர்களுககு நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். இந்த வாரம் நீங்க சனிபகவானை கும்பிடுங்க சந்தோஷங்கள் தானாக தேடி வரும். சந்திராஷ்டமம் நாளில் மவுன விரதம் இருங்க. பிரச்சினைகள் தீரும். அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு அதிர்ஷ்ட எண்: 30 அதிர்ஷ்ட நாள் : புதன் கிழமை


கும்பம்- சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு நினைத்ததெல்லாம் நடக்கும் சந்தோஷமான வாரமாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமும் சந்தோஷமும் அதிகமாக இருக்கும். கணவன் மனைவி இடையே அந்நியோன்னியம் அதிகமாகும். சொந்தக்காரர்கள் வருகை உங்களுக்கு சாதகமாக இருக்கும். பிள்ளைகள் வழியே மகிழ்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பாதிப்புகள் ஏற்படும் கவனமாக இருங்க. முன்கோபத்தை கட்டுப்படுத்துங்க. பணம் கொடுக்கல் வாங்கல் நன்மையையும் லாபத்தையும் கொடுக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு நன்மைகள் நடக்கும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். பயணங்கள் நன்மையில் முடியும். மாணவர்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடிய வாரம். படிப்பில் அக்கறையும் ஆர்வமும் அதிகமாகும். நினைவாற்றல் கூடும். இந்த வார மத்தியில் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருங்க. தேர்வுகளில் கவனம் செலுத்துங்கள். சிவ வழிபாடு சிக்கலை தீர்க்கும். அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள் அதிர்ஷ்ட எண்: 11 அதிர்ஷ்ட நாள் : வியாழன் கிழமை

மீனம் – இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் ஏற்படும். லட்சுமி கடாட்சம் கிடைக்கப் போகிறது. உங்களுக்கு தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வர்த்தகத்தில் லாபம் அதிகமாகும். அலுவலகத்தில் வேலைகளை சுறுசுறுப்பாக செய்வீர்கள் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். தாராள பணவரவால் தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகள் வரலாம். மந்த நிலைகள் நீங்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். சொத்துக்கள் விற்பனையில் லாபம் வரும். தர்மகர்மாதிபதி யோகம் கூடியுள்ளதால் நிறைய ஆலய திருப்பணிகளில் பங்கேற்பீர்கள். ஆன்மீக பயணங்கள் மன அமைதியை தரும். வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும். இந்த வாரம் சுப பலன்கள் அதிகம் நடைபெறும். மார்ச் 12,2020 காலை 5.35 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். தயிர் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வேலைகளை எப்போதும் போல செய்யலாம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வீண் வம்பு வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம். அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை அதிர்ஷ்ட எண்: 15 அதிர்ஷ்ட நாள் : திங்கட் கிழமை