விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள்

31 f
31 f

மேஷம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். பிற்பகல் 1.18 மணி முதல் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்: பெற்றோரின் விருப் பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். பிற்பகல் 1. 18 மணி முதல் விரயத்தில் சந்திரன் வர இருப்பதால் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக் கேற்ப மாற்றியமைத்து கொள்வீர் கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கடகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

சிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மன இறுக்கங்கள் உருவாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி குறை கூறுவார். பிற்பகல் 1.18 மணி முதல் சந்திராஷ்டமம் நீங்குவதால் மாற்றங்கள் ஏற்படும் நாள்.

கன்னி: விலை உயர்ந்த ஆபர ணம் வாங்குவீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். பிற்பகல் 1. 18 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

துலாம்: உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். . எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அமோகமான நாள்.

விருச்சிகம்: சிக்கனமாக செல வழித்து சேமிக்க தொடங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

தனுசு: கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மகரம்: சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும்.புது வாகனம் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகள் எடுக்கும் நாள் .

கும்பம்: கணவன், மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மீனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப் பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். வியா பாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பிற்பகல் 1.18 மணி முதல் மகிழ்ச்சி ஏற்படும் நாள்.