வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வரும்

1 8
1 8

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்கார்கள். மற்றவர்களின் பிரச்சினையில் தலையிடுவதால் வீண்பழி சொல் ஏற்படும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் உருவாகும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தினருடன் வீண்விவாதங்கள் வந்துபோகும். அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடையலாம். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுகப்பிரச்சினைகள் வந்து போகும். போராடி வெல்லும் நாள்.

மிதுனம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பணவரவும் உண்டு. நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். உறவினர்கள் உங்களின் சகிப்புத் தன்மையை பாராட்டுவார்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் மரியாதைக் கூடும். இனி
மையான நாள்.

கடகம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேச தொடங்குவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள்.

சிம்மம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தடை
கள் உடைபடும் நாள்.

கன்னி: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சாதாரணமாகப் பேசுவதைக்கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.

துலாம்: தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவி வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். எதிர்பாராத நன்மை
கள் உண்டாகும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வரும். வீட்டை விரிவுபடுத்துவதற்கு திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தி யோகத்தில் ஊழியர்கள் பாராட்டுவார்கள் சாதிக்கும் நாள்.

தனுசு: புதிய சிந்தனைகள் மனதில்தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.

மகரம்: பிரச்சனையின் ஆணிவேரை கண்டறிவீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துபோகும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்
களை முடிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம்லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கும்பம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை. தீட்டுவீர்கள் உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

மீனம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.முகப்பொலிவு கூடும். நேர்மறை எண்ணம் பிறக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.