இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்

1 9
1 9

மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங் களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபா ரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற் படும். உத்தியோகத்தில் யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்தி யோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள் .

கடகம்: அனுபவ பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

சிம்மம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோ கத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

கன்னி: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். நவீனமின்னணு சாதனங்கள் வாங்கு வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலித மாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்து ழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

துலாம்: சந்திராஷ்டமம் தொடர் வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். நீங்கள் யதார்த்தமாக பேசுவதை கூட சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்: மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பழைய கடன் பிரச்சினைகள் தீரும். தாய்மொழி வழியில் மதிக்கப் படுவீர்கள்.வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வியாபா ரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். எதிர்பாராத நன்மை உண்டாகும் நாள்.

தனுசு: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மகரம்: நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள் உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரம் செலிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள் .

கும்பம்: பழைய சிக்கல்களுக்கு எளிதாக தீர்வு காண்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். அரசு அதிகாரி
களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப் பார்கள். உத்தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்: குடும்பத்தினருடன் கலந்தா லோசித்து பழைய பிரச்சனை களுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயமுண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த பந்தங்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.