பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்!

1 9
1 9

மேஷம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும்உண்டு. பணப்பற்றாக்குறையை சாமர்த்தி யமாக சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

ரிஷபம்: குடும்பத்திலுள்ளவர் களுடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு மனை வாங்குவது விற்பது சுலபமாக முடியும். புது வாகனம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் பாராட்ட ப்படுவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

மிதுனம்: கடந்த இரண்டு நாட் களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும்.அழகும் இளமையும் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை உணர்வீர்கள். உற்சாகமான நாள்.

கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தெளிவான முடி வுகள் எடுக்க முடியாமல் குழம்பு வீர்கள். குடும்பத்தில் எதிர் பாராத செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் மற்றவர்களை விமர்சிக்காதீர்கள். சிக்கனம் தேவைப்படும் நாள்.

சிம்மம்: திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். உறவினர் நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங் கள் வரும். போராடி வெல்லும் நாள்.

கன்னி: சந்தர்ப்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு. சமயோசிதமாக பேசும் சாமர்த்தியம். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி பொறுப்பு களை ஒப்படைப்பார். புகழ் கௌரவம் கூடும்நாள்.

துலாம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கி கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். சாதிக்கும் நாள்.

விருச்சிகம்: கடந்த இரண்டு நாட் களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் விலகும், தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். வர வேண்டிய பணம் கைக்கு வரும், உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும், உத்தி யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்கள். விட்டதை பிடிக்கும் நாள்.

தனுசு: சந்திராஷ்டமம் தொட ங்குவதால் முக்கிய அலுவ ல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். போராட்டமான நாள்.

மகரம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற் றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். சாதுரியமான நாள்.

கும்பம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

மீனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை களின் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையு ணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.