13.06.2020 இன்றைய ராசிபலன்

rasi palan 1589167686 1
rasi palan 1589167686 1

மேஷம்:ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். கடன் பிரச்சினை கட்டுப் பாட்டிற்குள் வரும். வேற்று மதத்தவரின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் கமிஷன் ஸ்டேஷனரி  வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். இனிமையான நாள்.

ரிஷபம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கியபொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். அவசரத்திற்கு வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நண்பர்கள் வட்டம் விரியும், நட்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூல் ஆகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரி உங்களை மதிப்பார். மகிழ்ச்சியான நாள் .

கடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மன இறுக்கம் வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ள வர்கள் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபா ரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

சிம்மம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கன்னி: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர்கள். அரசாங்க விஷயங்கள் நல்லவிதத்தில் முடியும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சில புதுமை களை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.

துலாம்:புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையு ணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். கனவு நனவாகும் நாள்.

விருச்சிகம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு கை கால் வலி சோர்வு வந்து போகும். பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

தனுசு: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள் 

மகரம்: இதுவரை இழுபறியாக இருந்த வேலைகள் அனைத்தும் இப்பொழுது எளிதில் முடிக்கும் நிலை உருவாகும் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். அழகும் இளமையும் கூடும். உறவினர்களால் ஆதாய மடைவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதம் ஏற்படும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தி யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப் படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

மீனம்: எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிக ரிக்கும். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள் உண்டு. அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங் கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.