22.06.2020 இன்றைய ராசிபலன்

Untitled 1 copy 3

மேஷம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். சகோதர சகோதரிகளால் நன்மை உண்டு. பிரபலங்களை சரியாக பயன்படுத்தி கொள்வீர்கள். அரசு காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தைரியம் கூடும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தில் இருந்தமன சஞ்சலங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தார் அனைவரின் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அவசரத்திற்கு வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சோர்வு களைப்பு வந்து நீங்கும். வேலைச்சுமை அதிகரிக்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

கடகம்: எளிதாக முடிய வேண்டிய சில காரியங்களை கூட போராடி முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர்களால் பிரச்சினைகள் வந்து சேரும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் மோதல்கள் வேண்டாமே. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

சிம்மம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பெற்றோரின் ஆதரவும் கிட்டும். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் அதிக அக்கறை கட்டுவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். மரியாதை கூடும் நாள்.

கன்னி: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சியால் வெற்றி பெறும் நாள்.

துலாம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். இழுபறியாக இருந்த வேலைகள் அனைத்தும் முடியும். உறவினர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் அனைத்தும் பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

தனுசு: மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. மின்சார வகை சாதனங்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மகரம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.

கும்பம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. யோகா தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

மீனம்: எதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பரை சந்திப்பீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். வியாபாரத்தில் கமிஷன் புரோக்கரேஜ் வகைகளால் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும் . உழைப்பால் உயரும் நாள்.