23.06.2020 இன்றைய ராசிபலன்

rasi palan 1589167686 3

ரீ சார்வரி ஆண்டு – ஆணி 9 – செவ்வாய்கிழமை (23.06.2020)
நட்சத்திரம்: புனர்பூசம் பகல் 2.20 வரை பின்னர் பூசம்
திதி : துவிதியை காலை 11.50 வரை பின்னர் திருதியை
யோகம் : சித்த யோகம்
நல்லநேரம் : காலை 7.30 – 8.30 / மாலை 4.30 – 5.30

செவ்வாய்க்கிழமை – சுப ஓரை விவரங்கள்
(காலை 10.30 முதல் 11 வரை, பகல் 12 முதல் 1 வரை 4.30 முதல் 6 வரை, இரவு 7 முதல் 8 வரை
சுபகாரியங்கள் : சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள்

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். ஒரு சிலர் உங்கள் உதவியைநாடுவார்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமைஎடுத்துக் கொள்ளாதீர்கள். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள் .

சிம்மம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். பழைய பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாக பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் அலைக்கழிக்கப்படுவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கன்னி: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். புகழ் கௌரவம்கூடும் நாள்.

துலாம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உடன் பிறந்தவர்களால் பயனடைவீர்கள். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டு. உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். அந்தஸ்து உயரும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடுகளை கட்டும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவீர்கள். நல்ல மாற்றங்கள் ஏற்படும் நாள்.

தனுசு: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான் கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

மகரம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். தொழிலில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். பணியில் புது சலுகைகள் கிடைக்கும். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

கும்பம்: உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகார பதவியில் நட்பு கிடைக்கும் வழக்கில் நல்ல தீர்ப்புகள் வரும். பழைய சொந்த பந்தம் தேடி வரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மீனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். நட்பு வழியில் நல்ல செய்திகேட்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். கனவு நனவாகும் நாள்.