இன்று எந்த ராசியினர் சந்தோசத்தில் திழைக்கப்போகின்றார்கள்

Rasi Palan new cmp
Rasi Palan new cmp
aries 01 2
aries 01 2

மேஷம்:–மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு  சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சிலர் உங்களிடம் நயமாக பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்:- ரிஷப ராசிக்காரர்களே நீங்கள் கடினமான காரியத்தையும் எளிதாக பேசி முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மிதுனம்:– மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர் கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிகா ரத்தில் இருப்பவர்களை உதவி கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோ கத்தில்  தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.

கடகம்:- கடக ராசிக்காரர்களே குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர் களில் உண்மையானவர்களை கண்டு அறிவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் புது  பொறுப்புகளை  ஏற்பீர்கள்.

சிம்மம்: -சிம்ம ராசிக்காரர்களே எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வந்துபோகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபா ரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

virgo 06 2
virgo 06 2

கன்னி: -கன்னி ராசிக்காரர்களே நீங்கள் குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள் வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக் கும். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக் கங்களை கற்று கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்

libra 07 1
libra 07 1

துலாம்: – துலாம் ராசிக்காரர்களே நீங்கள் இதுவரை இருந்த களைப்பு சோர்வு அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி திரும்பும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் உதவியால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
மகிழ்ச்சியான நாள் 

scorpio 08 2
scorpio 08 2

விருச்சிகம்: — விருச்சிக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துபோகும். சிலர் உங்களை தாழ்த்திப்பேசினாலும், விமர்சித்தாலும் கலங்கி கொண்டிருக்காதீர்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்

sagittarius 09 2
sagittarius 09 2

தனுசு: -தனுசு ராசிக்காரர்களே நீங்கள் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

capricorn 10 2
capricorn 10 2

மகரம்:-மகர ராசிக்காரர்களே நீங்கள் எந்த பிரச்சினையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். சிறப்பான நாள்

aquarius 11 2
aquarius 11 2

கும்பம்: -கும்ப ராசிக்காரர்களே உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். மாற்றங்கள் ஆக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

pisces 12 2
pisces 12 2

மீனம்: –மீன ராசிக்காரர்களே உங்கள் குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உறவி னர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுகொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதிய பாதை தெரியும் நாள்