இன்று சந்தோசத்தில் திழைக்கும் ராசி எது

rasi
rasi

மேஷம்: மேஷ ராசிக்காரா்களே-எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடிவருவார். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புகழ் கௌரவம் உயரும் நாள்.

taurus 02 1
taurus 02 1

ரிஷபம்:-ரிஷப ராசிக்காரா்களே நீங்கள் மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள்.புதிய பொறுப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். சாதிக்கும் நாள்.

gemini 03 1
gemini 03 1

மிதுனம்-:மிதுன ராசிக்காரா்களே உங்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல் டென்ஷன் குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பாதியில் நின்ற வேலைகள் முடியும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

கடகம்:- கடக ராசிக்காரா்களே உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படு வீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

leo 05 1
leo 05 1

சிம்மம்: -சிம்ம ராசிக்காரா்களே நீங்கள் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

virgo 06 1
virgo 06 1

கன்னி:- கன்னி ராசிக்காரா்களே உங்கள் குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.

libra 07 1
libra 07 1

துலாம்:- துலாம் ராசிக்காரா்களே உங்கள் புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

scorpio 08 1
scorpio 08 1

விருச்சிகம்-: விருச்சிக ராசிக்காரா்களே உங்கள் அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பிரியமான வர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

sagittarius 09 1
sagittarius 09 1

தனுசு:-தனுசு ராசிக்காரா்களே உங்கள் சொத்து பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

capricorn 10 1
capricorn 10 1

மகரம்:- மகர ராசிக்காரா்களே நீங்கள் கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில்தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். மனசாட்சி படி  செயல்படும் நாள்.

aquarius 11 1
aquarius 11 1

கும்பம்:  -கும்ப ராசிக்காரா்களே உங்கள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். சிலர் உங்களை குறை கூறினாலும் அதை பெரிதாக்க வேண்டாம்.வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினை உருவாகும். உத்தியோகத்தில் டென்ஷன் அதிகரிக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

pisces 12 1
pisces 12 1

மீனம்:–மீன ராசிக்காரா்களே நீங்கள் திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர் களுடன் விரிசல்கள் ஏற்படும். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.