இன்று எந்த ராசியினருக்கு அதிக சந்தோசம்!

images 9
images 9
aries 01 4
aries 01 4

மேஷம்:-மேஷ ராசிக்காரா்களே உங்களுக்கு- சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பணப் புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நல்லன நடக்கும் நாள்.

taurus 02 4
taurus 02 4

ரிஷபம்:- ரிஷப ராசிக்காரா்களே உங்கள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும் பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் குறையும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்று கொள்வது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.

gemini 03 4
gemini 03 4

மிதுனம்:- மிதுன ராசிக்காரா்களே நீங்கள் கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவது நல்லது. சகோதர வகையில் சங்கடங்கள் வந்து நிற்கும். பழைய பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

cancer 04 1 2
cancer 04 1 2

கடகம்:- கடக ராசிக்காரா்களே நீங்கள் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் புதுத் திட்டங்களை அதிகாரிகள் வரவேற்பார்கள். சிறப்பான நாள்.

leo 05 4
leo 05 4

சிம்மம்:– சிம்ம ராசிக்காரா்களே நீங்கள் புதிதாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். மதிப்பு கூடும் நாள்.

virgo 06 4
virgo 06 4

கன்னி: -கன்னி ராசிக்காரா்களே நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுக்கும் நாள்.

libra 07 4
libra 07 4

துலாம்—:துலாம் ராசிக்காரா்களே உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். உங்களின் அணுகுமுறையை மாற்றி கொள்வது நல்லது. உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.

scorpio 08 5
scorpio 08 5

விருச்சிகம்: —விருச்சிக ராசிக்காரா்களே நீங்கள் கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். பழைய பிரச்சினைகளை பேசி தீர்ப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள்.

sagittarius 09 5
sagittarius 09 5

தனுசு: –தனுசு ராசிக்காரா்களே நீங்கள் -கனிவாக பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

capricorn 10 5
capricorn 10 5

மகரம்: – மகர ராசிக்காரா்களே நீங்கள்  புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் உதவி கிடைக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

aquarius 11 5
aquarius 11 5

கும்பம்:–  கும்ப ராசிக்காரா்களே நீங்கள் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய கடனை தீர்ப்பீர்கள். கலைப் பொருட்களை வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

pisces 12 4
pisces 12 4

மீனம் -மீனராசிக்காரர்களே நீங்கள் தேவைக்கு புதிய ஆடைகள் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். ஆனால், புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும்