இன்று யோகம் அடிக்கப்போகும் 3 ராசிகளும் எவை

images 9
images 9
aries 01 4
aries 01 4

மேஷம்:- மேஷ ராசிக்காரா்களே நீங்கள் இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். உற்சாகமான நாள்.

taurus 02 4
taurus 02 4

ரிஷபம்- :ரிஷப ராசிக்காரா்களே உங்கள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வேலைகளை உடனே முடிக்க வேண்டும் என நினைப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார் தான். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்று கொள்வது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

gemini 03 4
gemini 03 4

மிதுனம்–: மிதுன ராசிக்காரா்களே நீங்கள் எதையும் திட்டமிட்டு செய்ய பாருங்கள். குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். உடல் நலம் பாதிக்கும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர் கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். நிதானம் தேவைப்படும் நாள்.

cancer 04 1 2
cancer 04 1 2

கடகம்-:கடக ராசிக்காரா்களே உங்கள் குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள். வீட்டிற்கு தேவையான சாதனங்கள் வாங்குவீர்கள். வேற்றுமதத்தரின் உதவி கிடைக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலர் இப்பொழுது உங்களை சந்திப்பார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாள்.

leo 05 4
leo 05 4

சிம்மம்: -சிம்ம ராசிக்காரா்களே உங்கள்எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். உங்களை தவறாக நினைத்து கொண்டிருந்தவர்களின் மனம் மாறும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிந்தனை திறன் பெருகும் நாள்.

virgo 06 4
virgo 06 4

கன்னி:– கன்னி ராசிக்காரா்களே நீங்கள் உணர்ச்சி பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாக பேசுவீர்கள். செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விஐபிகளின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாண்டு லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சாதிக்கும் நாள்.

libra 07 4
libra 07 4

துலாம்:– துலாம் ராசிக்காரா்களே உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருங்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்

scorpio 08 5
scorpio 08 5

விருச்சிகம்: –விருச்சிக ராசிக்காரா்களே கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதம் வந்து போகும். தாயாரின் உடல்நிலை சீராகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உயர்திகாரிகள் ஆதரிப்பார்கள். நிம்மதி உண்டாகும் நாள்.

sagittarius 09 5
sagittarius 09 5

தனுசு:- தனுசு ராசிக்காரா்களே எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். புது வேலை அமையும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.

capricorn 10 5
capricorn 10 5

மகரம்:- மகர ராசிக்காரா்களே உங்கள் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றி உள்ளவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

aquarius 11 5
aquarius 11 5

கும்பம்:-கும்ப ராசிக்காரா்களே உங்கள் பால்ய நண்பர்கள் தேடி வருவார்கள். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். கலை பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்

pisces 12 4
pisces 12 4

மீனம்:-  மீன ராசிக்காரா்களே நீங்கள் சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.