இன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமைந்திருக்கு

Daily Prediction Seithi Churul
Daily Prediction Seithi Churul
aries 01 5
aries 01 5

மேஷம்:–மேஷ ராசிக்காரா்களே உங்களுக்கு புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும்.  பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.  சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.  ஆன்மிக  நாட்டம் அதிகரிக்கும்.  வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தி
யோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.

taurus 02 5
taurus 02 5

ரிஷபம்:-ரிஷப ராசிக்காரா்களே திட்டமிட்ட வேலைகள் தடையின்றி முடியும். தாய் வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.  வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.  உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

gemini 03 5
gemini 03 5

மிதுனம்:–மிதுன ராசிக்காரா்களே உங்களுக்கு துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார். வெற்றி பெறும் நாள்.

cancer 04 3
cancer 04 3

கடகம்:–கடக ராசிக்காரா்களே உங்களுக்கு குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.  இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.  புதிய பாதை தெரியும் நாள்.

leo 05 5
leo 05 5

சிம்மம்:- சிம்ம ராசிக்காரா்களே உங்கள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

virgo 06 5
virgo 06 5

கன்னி: -கன்னி ராசிக்காரா்களே உங்கள் குடும்பத்தில் விட்டு கொடுத்துப் போவது நல்லது. சொந்த பந்தங்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். உடல் நலம் பாதிக்கும். வாகனத்தில் பயணிக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக  ஊழியர்களால் பிரச்னை வரக்கூடும்.  பொறுமை தேவைப்படும் நாள்.

libra 07 5
libra 07 5

துலாம்:– துலாம் ராசிக்காரா்களே உங்கள் குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

scorpio 08 4
scorpio 08 4

விருச்சிகம்:–விருச்சிக ராசிக்காரா்களே நீங்கள் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். வீடு வாகனத்தை சீர்செய்வீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர் அவர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். சிந்தனை திறன் பெருகும் நாள்.

sagittarius 09 6
sagittarius 09 6

தனுசு:–தனுசு ராசிக்காரா்களே உங்களுக்கு கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். நேர்மறை சிந்தனை பிறக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

capricorn 10 6
capricorn 10 6

மகரம்: –மகர ராசிக்காரா்களே உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். நண்பர்களுடன் நெருடல்கள் வந்து போகும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் உயரதிகாரி குறை கூறுவார். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

aquarius 11 6
aquarius 11 6

கும்பம்:– கும்ப ராசிக்காரா்களே உங்கள்  பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

pisces 12 5
pisces 12 5

மீனம்:– மீன ராசிக்காரா்களே குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். திடீரென்று அறிமுகமாகுபவரால் வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். வெற்றி பெறும் நாள்.