இன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமைந்திருக்கு

rasi
rasi
aries 01 8
aries 01 8

மேஷம்:- மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிறு சிறு ஏமாற்றங்கள் வந்து போகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

taurus 02 8
taurus 02 8

ரிஷபம்:- ரிஷப ராசிக்காரர்களே பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். பயணங்கள் சிறப்பாக அமையும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நன்மை கிட்டும் நாள்.

gemini 03 8
gemini 03 8

மிதுனம்:-மிதுன ராசிக்காரர்களே உங்கள் குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

cancer 04 6
cancer 04 6

கடகம்: -கடக ராசிக்காரர்களே நீங்கள் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக் கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.

leo 05 8
leo 05 8

சிம்மம்:–சிம்ம ராசிக்காரர்களே நீங்கள் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

virgo 06 8
virgo 06 8

கன்னி:- கன்னி ராசிக்காரா்களே உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் திறமை வெளிப்படும். நன்மை நடக்கும் நாள்.

libra 07 8
libra 07 8

துலாம்:- துலாம் ராசிக்காரா்களே கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

scorpio 08 8
scorpio 08 8

விருச்சிகம்:- விருச்சிக ராசிக்காரா்களே உங்கள்  ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து போகும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லப்பாக முடியும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் உயர் அதிகாரியைப் பற்றி விமர்சிக்க வேண்டாம். எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

sagittarius 09 9
sagittarius 09 9

தனுசு: –தனுசு ராசிக்காரா்களே நீங்கள் அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர பகை வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.

capricorn 10 9
capricorn 10 9

மகரம்:- மகர ராசிக்காரா்களே உங்கள் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. புது வேலை அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.

aquarius 11 9
aquarius 11 9

கும்பம்: — கும்ப ராசிக்காரா்களே நீங்கள் தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க  நேரிடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

pisces 12 8
pisces 12 8

மீனம்:- மீன ராசிக்காரா்களே புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாதிக்கும் நாள்.