இன்று எந்த ராசியினருக்கு சந்திராஷ்டமம்!

e 1
e 1
aries 01 8
aries 01 8

மேஷம்:- மேஷ ராசிக்காரா்களே உங்களுக்கு பகல் 12.36 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். மாலையில் நிம்மதி பெறும் நாளாக காணப்படும்

taurus 02 8
taurus 02 8

.ரிஷபம்:–.ரிஷப ராசிக்காரா்களே உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். பகல் 12.37 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் இருப்பதால் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

gemini 03 8
gemini 03 8

மிதுனம்:- மிதுன ராசிக்காரா்களே நீங்கள் ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். வெற்றி பெறும் நாள்.

cancer 04 6
cancer 04 6

கடகம்:–கடக ராசிக்காரா்களே உங்கள் குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாளாக காணப்படுகின்றது.

leo 05 8
leo 05 8

சிம்மம்:- சிம்ம ராசிக்காரா்களே எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப்போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதரி உதவுவார். பழைய கடன் பிரச்னை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் வேலைகள் விரைந்து முடியும். நன்மை கிட்டும் நாள்.

virgo 06 8
virgo 06 8

கன்னி:-கன்னி ராசிக்காரா்களே உங்கள் குடும்பத்திலும் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். துணிச்சலுடன் செயல்படும் நாள்.

libra 07 8
libra 07 8

துலாம்:- துலாம் ராசிக்காரா்களே உங்கள் குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

scorpio 08 8
scorpio 08 8

விருச்சிகம்:–விருச்சிக ராசிக்காரா்களே உங்களுக்கு பகல் 12.37 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாலையில் மகிழ்ச்சி ஏற்படும் நாள்.

sagittarius 09 9
sagittarius 09 9

தனுசு: –தனுசு ராசிக்காரா்களே நீங்கள் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும்.வியாபாரத்தில் போட்டி களையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து போங்கள். பகல் 12 .37 மணி முதல் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.

capricorn 10 9
capricorn 10 9

மகரம்:–மகர ராசிக்காரா்களே நீங்கள் தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். பகல் 12.31 முதல் சந்திரன் விரயத்தில் வர இருப்பதால் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

aquarius 11 9
aquarius 11 9

கும்பம்:– கும்ப ராசிக்காரா்களே நீங்கள் உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சாதிக்கும் நாள்.

pisces 12 8
pisces 12 8

மீனம்:– மீன ராசிக்காரா்களே உங்கள் உடல் அசதி சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். உங்கள் குடும்பத்தில் அமைதி திரும்பும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். உறவினர்களிடம் எதிர் பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன விஷயங்கள் முடியும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மாற்றங்கள் ஏற்படும் நாள்.