இன்று( 02.09.2020)எந்த ராசியினருக்கு யோகம்!

senganthal rasipalan 1
senganthal rasipalan 1
aries 01
aries 01

மேஷம்:- மேஷ ராசிக்காரா்களே உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். விலை உயர்ந்த பொருட் கள் வாங்கு
வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ் கௌரவம் கூடும் நாள்.

taurus 02
taurus 02

ரிஷபம்:- ரிஷப ராசிக்காரா்களே நீங்கள் அனுபவ பூர்வமாகவும் அறிவு பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

gemini 03
gemini 03

மிதுனம்:- மிதுன ராசிக்காரா்களே நீங்கள் கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மகிழ்ச்சியான நாள்.

cancer 04
cancer 04

கடகம்:-கடக ராசிக்காரா்களே உங்களுக்க சந்திராஷ்டமம் தொடங்குவதால் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். உங்களையாரும் கண்டுகொள் வதில்லை, உங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவ தில்லை என்று எல்லாம் சில நேரங்களில் குழம்பு வீர்கள். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க  வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.

leo 05
leo 05

சிம்மம்:- சிம்ம ராசிக்காரா்களே நீங்கள் உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார் . திறமைகள் வெளிப்படும் நாள்.

virgo 06
virgo 06

கன்னி: -கன்னி ராசிக்காரா்களே நீங்கள் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி புதிய முயற்சிகளை பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.

libra 07
libra 07

துலாம்: -துலாம் ராசிக்காரா்களே உங்கள் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உங்கள் பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப் பீர்கள். நீண்ட நாள் பிரார்த் தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

scorpio 08
scorpio 08

விருச்சிகம்:–விருச்சிக ராசிக்காரா்களே நீங்கள் எதிர்பார்த்த காரியங்களில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும்.தாயாருடன் கருத்து மோதல்கள்வந்து செல்லும்  வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபா ரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடை வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உயர்வு பெறும் நாள் .

sagittarius 09
sagittarius 09

தனுசு:-தனுசு ராசிக்காரா்களே நீங்கள் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு.பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

capricorn 10
capricorn 10

மகரம்:- மகர ராசிக்காரா்களே குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உறவுகள் வருகையால் வீடு களை கட்டும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதுமுதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள்உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.

aquarius 11
aquarius 11

கும்பம்: -கும்ப ராசிக்காரா்களே உங்கள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். வியாபா ரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தி யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங் கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

pisces 12
pisces 12

மீனம்: -மீன ராசிக்காரா்களே நீங்கள் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். பழைய கடனைதீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.