இன்றைய(09.09.2020) நாள் உங்களுக்கு எப்படி அமைந்திருக்கு

senganthal rasipalan 1 4
senganthal rasipalan 1 4
aries 01 3
aries 01 3

மேஷம்:- மேஷ ராசிக்காரர்களே கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். ஆடை ஆபரணம் சேரும்.  வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

taurus 02 3
taurus 02 3

ரிஷபம்:-ரிஷப ராசிக்காரர்களே உங்கள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தினரை குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாக புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வேண்டாம். உத்தியோகத்தில் பொறுமை தேவைப்படும் நாள்.

gemini 03 4
gemini 03 4

மிதுனம்:-மிதுன ராசிக்காரர்களே நீங்கள் ஒரு விஷயத்தை நினைத்து அதிக அளவில் குழப்பம் அடைவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். போராடி வெல்லும் நாள்.

cancer 04 4
cancer 04 4

கடகம்:- கடக ராசிக்காரர்களே நீங்கள் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். நம்பிக்கைக்குரிய வரை கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். சிறப்பான நாள்.

leo 05 4
leo 05 4

சிம்மம்:- சிம்ம ராசிக்காரர்களே உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கடமை உணர்வுடன் செயல்படும் நாள்.

virgo 06 4
virgo 06 4

கன்னி: -கன்னி ராசிக்காரர்களே நீங்கள் கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் விலகும். நீண்ட நாட்களாகதள்ளிப் போன காரியங்கள் முடியும் உறவினர்கள் மதிப்பார்கள். வீடு வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம்வரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

libra 07 5
libra 07 5

துலாம்:- துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். உங்களை யாரும் கண்டுகொள்வதில்லை உங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.  நாவடக்கம் தேவைப்படும் நாள்.

scorpio 08 4
scorpio 08 4

விருச்சிகம்:-விருச்சிக ராசிக்காரர்களே உங்களின் அறி வாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

sagittarius 09 4
sagittarius 09 4

தனுசு:-தனுசு ராசிக்காரர்களே நீங்கள் கனிவாக பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில்சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்.

capricorn 10 4
capricorn 10 4

மகரம்:-மகர ராசிக்காரர்களே மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும்நாள்.

aquarius 11 4
aquarius 11 4

கும்பம்:-கும்ப ராசிக்காரர்களே நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். புதுவேலை கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். தாயாருக்கு கை கால் வலி வந்து போகும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.

pisces 12 4
pisces 12 4

மீனம்: -மீன ராசிக்காரர்களே தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி பாராட்டும் படி நடந்து கொள்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.