இன்று எந்த ராசியினருக்கு பணப்புழக்கம் !

Indraiya Rasi Palan 356x220 1
Indraiya Rasi Palan 356x220 1
aries 01 4
aries 01 4

மேஷம்:- மேஷ ராசிக்காரர்களே நீங்கள் இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும்நாள்.

taurus 02 4
taurus 02 4

ரிஷபம்:- ரிஷப ராசிக்காரர்களே உங்கள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். மனதில் பட்டதை பளிச்சென்று பேசி விமர்சனத்துக்கு உள்ளாகி மற்றவர்களுக்காக பரிந்து பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

gemini 03 5
gemini 03 5

மிதுனம்:-மிதுன ராசிக்காரர்களே நீங்கள் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் கஷ்ட ப்படுவீர்கள்.  ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.

cancer 04 5
cancer 04 5

கடகம்:- கடக ராசிக்காரர்களே நீங்கள் எதிலும் வெற்றி பெறுவீர்கள். சொந்த பந்தங்கள்கேட்ட உதவியை செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புதுப் பொருள் வந்து சேரும். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

leo 05 5
leo 05 5

சிம்மம்:- சிம்ம ராசிக்காரர்களே நீங்கள்  உங்களின் நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். கல்யாண பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். பழையகடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள். மதிப்பு கூடும் நாள்

virgo 06 5
virgo 06 5

கன்னி:- கன்னி ராசிக்காரர்களே நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பிரச்சினைகளுக்கு எதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்

libra 07 6
libra 07 6

துலாம்:-துலாம் ராசிக்காரர்களே உங்களுக்க சந்திராஷ்டமம் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாத படி வேலைச்சுமையும் அலைச்சலும் இருக்கும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்து போட்டு பார்க்க வேண்டி வரும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். பேச்சில் காரம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும்.விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

scorpio 08 5
scorpio 08 5

விருச்சிகம்: -விருச்சிக ராசிக்காரர்களே உங்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுகொள்வார்கள். கல்யாண பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். புதுத்தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

sagittarius 09 5
sagittarius 09 5

தனுசு:- தனுசு ராசிக்காரர்களேஉங்களுக்கு பண புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகன வசதி பெருகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

capricorn 10 5
capricorn 10 5

மகரம்: -மகரம் ராசிக்காரர்களே உங்கள் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். கனவு நனவாகும் நாள்.

aquarius 11 1 1
aquarius 11 1 1

கும்பம்:- கும்ப ராசிக்காரர்களே உங்களுக்கு எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் ஆறுதல் கிடைக்கும். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்

pisces 12 5
pisces 12 5

மீனம்:- மீன ராசிக்காரர்களே உங்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். அரசால் ஆதாயம் உண்டு. மாற்று மதத்தவர் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகித்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.