இன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமைந்திருக்கு !

images 5
images 5
mesam
mesam

மேஷம்:-மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

risapam
risapam

ரிஷபம்:-ரிஷப ராசிக்காரர்களே நீங்கள் உங்கள் குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். புதுவாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். மன நிம்மதி உண்டாகும் நாள்.

mithunam
mithunam

மிதுனம்:- மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்பசூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.

kadakam
kadakam

கடகம்:– கடக ராசிக்காரர்களே நீங்கள் எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நண்பர்கள் உதவுவார்கள். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில்  திருப்தி உண்டாகும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

simmam
simmam

சிம்மம்:-சிம்ம ராசிக்காரர்களே குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். சொத்து பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் ரெட்டிப்புலாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

kanni
kanni

கன்னி:-கன்னி ராசிக்காரர்களே கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். திடீர் பணவரவு உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். இனிமையான நாள்.

thulam
thulam

துலாம்:–துலாம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்து கொண்டிருக்காதீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

viru
viru

விருச்சிகம்: –விருச்சிக ராசிக்காரர்களே குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. சகோதர வகையில் மனஸ்தாபங்கள் வந்து நிற்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை . ஆடம்பர செலவுகளால் சேமிப்பு கரையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுங்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

thanu
thanu

தனுசு: –தனுசு ராசிக்காரர்களே குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். மற்றவர்களின் மனநிலையை உணர்ந்து பேசும் பக்கம் உண்டாகும். காணாமல் போனமுக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில்  சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். எண்ணங்கள் நிறைவேறும் நாள்.

magaram
magaram

மகரம்:-மகர ராசிக்காரர்களே உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

kumpam
kumpam

கும்பம்:- கும்ப ராசிக்காரர்களே உங்களுக்கு குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திவரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உற்சாகமான நாள்.

meenam
meenam

மீனம்:-மீன ராசிக்காரர்களே சந்திராஷ்டமம் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கி கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.