இன்றைய நாள் (10 10 2020) சனிக்கிழமை உங்களுக்கு எப்படி !

today rasipalan 1
today rasipalan 1

மேஷம்:

எதிர்ப்புகள் அடங்கும். பால்யநண்பர்கள் உதவுவார்கள். புதுவேலை கிடைக்கும். பழைய கடனைதீர்க்க முயற்சி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

 ரிஷபம்: 

குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்புகிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம்உண்டு. உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனைஏற்கப்படும். முயற்சியால் முன்னேறும் நாள்.

மிதுனம்

கணவன்-மனைவிக்குள்அன்யோன்யம் பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். தோற்றப் பொலிவு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புதிய முயற்சிகள் பலிதமாகும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

கடகம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக்கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். திடமனதுடன் இருக்க வேண்டிய நாள் .

சிம்மம்

கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களால் மன சங்கடங்கள் வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. லேசாக தலை வலிக்கும்.வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கன்னி

உங்கள் இலக்கை நோக்கிமுன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். புது பொருள் வந்து சேரும். வியாபாரத்தில் புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள் .

துலாம்

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகள் இந்த சூழ்நிலைக்கு தகுந்தார்போல் பொறுப்பாக இருப்பார்கள்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் ஆத்ரவு கிடைக்கும். உத்தியோகத்தில் சகஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

விருச்சிகம்

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்காக சிலபொறுப்புகளை ஏற்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுகொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும்.புதிய பாதை தெரியும் நாள்.

  தனுசு

சந்திராஷ்டமம் இருப்பதால் சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். உறவினர் நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் கவனம் செலுத்துவது நல்லது . பொறுமை தேவைப்படும் நாள்.

மகரம்

தன்னம்பிக்கையுடன் பொதுகாரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார்
ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில்எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும்.உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். அமோகமான நாள்.

 மீனம்

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து பேசுவார்கள். கனவு நனவாகும் நாள்