இன்றைய தினம் எந்த ராசியினருக்கு அதிஸ்டம்!

large djgfjgfkj 72809
large djgfjgfkj 72809
mesam
mesam

மேஷம்:- மேஷ ராசிக்காரர்களே நீங்கள் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிட்டும் நாள்.

risapam
risapam

ரிஷபம்: -ரிஷப ராசிக்காரர்களே குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். முயற்சியால் வெல்லும் நாள்.

mithunam
mithunam

மிதுனம்: -மிதுன ராசிக்காரர்களே குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். புதியவர் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் மேலதி காரிஒத்துழைப்பார். மனசாட்சி படி செயல்படும் நாள்.

kadakam
kadakam

கடகம்:- கடக ராசிக்காரர்களே ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. அவசர முடிவுகளை தவிர்க்க பாருங்கள். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறை கூறு வார்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

simmam
simmam

சிம்மம்: -சிம்ம ராசிக்காரர்களே கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உறவினர் நண்பர்களில் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வந்து நீங்கும்.  தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

kanni
kanni

கன்னி:- கன்னி ராசிக்காரர்களே எதிர்பார்ப்புகள்  நிறைவேறும்.பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பிரபலங்கள் உதவுவார்கள்.  வியாபாரத்தில் வேலையாட்களின் ரசனையை புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள்.  மதிப்பு கூடும் நாள்.

thulam
thulam

துலாம்:- துலாம் ராசிக்காரர்களே சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வார்கள்.  சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள்.  வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில்  அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். சாதிக்கும் நாள்.

viru
viru

விருச்சிகம்:- விருச்சிக ராசிக்காரர்களே கணவன்- மனை விக்குள் அன்னியோன்யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள்.வியாபாரத்தில்  சில சூட்சுமங்களை புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

thanu
thanu

தனுசு:- தனுசு ராசிக்காரர்களே சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டாம். பிள் ளைகளிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டிஇருக்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பணிச்சுமை அதிகரிக்கும் நாள்.

magaram
magaram

மகரம்:- மகர ராசிக்காரர்களே பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு.வாகனத்தை சீர் செய்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் தைரியமான முடிவுகள் எடுப்பீர்கள்.நன்மை கிட்டும் நாள்.

kumpam
kumpam

கும்பம்: கும்ப ராசிக்காரர்களே சமயோசிதமாக, சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். அதிகார பதவியில் இருப்பவரின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுங்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அமோகமான நாள்

meenam
meenam

மீனம்:- மீனம் ராசிக்காரர்களே குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.  அக்கம் – பக்கம் வீட்டாரின் நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்து ஆகும்.  உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கனவு நினைவாகும் நாள்.