இன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமைந்திருக்கு

r
r
mesam
mesam

மேஷம்:-மேஷ ராசிக்காரர்களே நட்பு வட்டம் விரியும். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

risapam
risapam

ரிஷபம்:-ரிஷப ராசிக்காரர்களே பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

mithunam
mithunam

மிதுனம்:-மிதுன ராசிக்காரர்களே குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

kadakam
kadakam

கடகம்:-கடக ராசிக்காரர்களே எதிலும் உற்சாகமாக செயல்பட்டு முன்னேறுவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். பழைய பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

simmam
simmam

சிம்மம்:- சிம்ம ராசிக்காரர்களே ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரது விமர்சனங்களுக்கு கேலிப் பேச்சிற்கும்ஆளாவீர்கள். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள் யாருக்கும் பணம் நகை வாங்கி தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

kanni
kanni

கன்னி:-கன்னி ராசிக்காரர்களே நீங்கள் விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உடல் அசதி சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளிடம் வீண் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

thulam
thulam

துலாம்:-துலாம் ராசிக்காரர்களே பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். புதிய கோணத்தில் சிந்தித்து பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிறப்பான நாள்.

viru
viru

விருச்சிகம்:- விருச்சிக ராசிக்காரர்களே உறவினர் நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். மற்றவர்களுக் காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். விலகி நின்றவர்கள்விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் புதிய’ வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.

thanu
thanu

தனுசு:-தனுசு ராசிக்காரர்களே கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

magaram
magaram

மகரம்:- மகர ராசிக்காரர்களே சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

kumpam
kumpam

கும்பம்:-கும்ப ராசிக்காரர்களே மனைவியால் அனுகூலமான பலன்கள் உண்டு. புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். சகோதரர்கள் உதவிக்கரமாக இருப்பார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

meenam
meenam

மீனம்:- மீன ராசிக்காரர்களே விஐபிகள் அறிமுகம் ஆவார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர்கள், நண்பர்கள் வீடு தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.