இன்றைய நாள் (15.10 2020) வியாழக்கிழமை உங்களுக்கு எப்படி !

today rasipalan 1
today rasipalan 1

மேஷம்:

பிள்ளைகளின் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்

அரசு அதிகாரிகள் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வந்துபோகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தொட்டது துலங்கும் நாள்.

மிதுனம்

உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். தைரியமுடன் செயல்பட வேண்டிய நாள்.

கடகம்

இதுவரை பிரச்னைகள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் தற்போது கைக்கு வந்து சேரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உறவினர்கள், நண்பர்களிடையேமதிப்பு உயரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாற்றங்கள் ஏற்படும் நாள்.

சிம்மம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். நண்பர்கள் உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். பொறுமை தேவைப்படும் நாள்.

கன்னி

சின்ன சின்ன வேலை களையும் அலைந்து, திரிந்து முடிக்க வேண்டிவரும். பிள்ளை களால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

துலாம்

வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். இனிமையான நாள்.

விருச்சிகம்

பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் பயன் அடைந்தவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.வியாபாரத்தில் சில சூட்சமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாக திறமை வெளிப்படும். சாதிக்கும் நாள்.

தனுசு

கணவன் – மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வெளி ஊரில் இருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிர்ஷ்டமான நாள்.

மகரம்

சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். பொறுமை தேவைப்படும் நாள்.

கும்பம்

சவாலாக தெரிந்த சில வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபா ரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நன்மை நடக்கும் நாள்.

மீனம்

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகார பதவியில் உள்ளவர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சியால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வார்கள். தொட்டது துலங்கும் நாள்.