இன்று சந்திராஷ்டமம் ஆட்டிப் படைக்கப் போகும் ராசிக்காரர் நீங்களா?

27
27
mesam
mesam

மேஷம்:-மேஷ ராசிக்காரர்களே குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். எங்கு சென்றாலும் மதிப்பு மரியாதை கூடும். மனைவி வழியில் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் சில ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

risapam
risapam

ரிஷபம்:- ரிஷப ராசிக்காரர்களே உணர்ச்சிப் பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரி  சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சாதிக்கும் நாள்.

mithunam
mithunam

மிதுனம்:-மிதுன ராசிக்காரர்களே கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும்.  உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

kadakam
kadakam

கடகம்:- கடக ராசிக்காரர்களே சந்திராஷ்டமம் இருப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்து கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் சகஊழியர்களுடன் அளவாக பழகுங்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

simmam
simmam

சிம்மம்:-சிம்ம ராசிக்காரர்களே பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்பினை ஏற்பீர்கள். நம்பிக்கை கூடும் நாள்.

kanni
kanni

கன்னி:-கன்னி ராசிக்காரர்களே குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்

thulam
thulam

துலாம்:– துலாம் ராசிக்காரர்களே புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

viru
viru

விருச்சிகம்:- விருச்சிக ராசிக்காரர்களே பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. தாய் வழி உறவுகளால் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வேற்று மதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில்  இழந்த சலுகையை மீண்டும் பெறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

thanu
thanu

தனுசு: -தனுசு ராசிக்காரர்களே தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீட்டை விரிவுபடுத்துவதை பற்றி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். முயற்சியால் முன்னேறும் நாள்.

magaram
magaram

மகரம்:- மகர ராசிக்காரர்களே  குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நவீன மின்னணு மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உடல்நலம் சீராகும். நீண்ட நாள் பிரச்சினைகள் வெகுவாக குறையும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மாற்றங்கள் ஏற்படும் நாள்.

kumpam
kumpam

கும்பம்:- கும்ப ராசிக்காரர்களே ராசிக்குள் சந்திரன்  இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். சொந்தபந்தங்களின் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும்.வியாபாரத்தில்பாக்கிகளை நயமாகப்பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

meenam
meenam

மீனம்:-மீன ராசிக்காரர்களே குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டுவீர்கள். பழைய கடன் பிரச்சினைகள் அவ்வப்போது மனசை வாட்டும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் அதிரடி முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள் . கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.