இன்று சந்திராஷ்டமம் ஆட்டிப் படைக்கப் போகும் ராசிக்காரர் நீங்களா?

t
t
mesam
mesam

மேஷம்:- மேஷ ராசிக்காரர்களே எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு மரியாதை கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

risapam
risapam

ரிஷபம்:-ரிஷப ராசிக்காரர்களே பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். வெற்றிபெறும் நாள்.

mithunam
mithunam

மிதுனம்:- மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல் டென்ஷன் கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் புதிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

kadakam
kadakam

கடகம்:- கடக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக முடிவு செய்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டியநாள்.

simmam
simmam

சிம்மம்: – சிம்ம ராசிக்காரர்களே நீங்கள் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாவீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் சக ஊழியருடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

kanni
kanni

கன்னி: -கன்னி ராசிக்காரர்களே எதிலும் வெற்றி பெறுவீர்கள். எங்குச் சென்றாலும் மதிப்பு மரியாதை கூடும். பெற்றோரின் ஆதரவு பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். இனிமையான நாள்.

thulam
thulam

துலாம்:- துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். சிலர் உங்களை நம்பிமுக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். முயற்சியால் வெற்றி பெறும் நாள்.

viru
viru

விருச்சிகம்:– விருச்சிக ராசிக்காரர்களே கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

thanu
thanu

தனுசு: -தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்து கொள்ள வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

magaram
magaram

மகரம்:-மகர ராசிக்காரர்களே உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

kumpam
kumpam

கும்பம்:-கும்ப ராசிக்காரர்களே பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

meenam
meenam

மீனம்: -மீன ராசிக்காரர்களே புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதுமைபடைக்கும் நாள்.