இன்று சந்தோசத்தில் திளைக்கப் போவது எந்த ராசியினர்

t 1
t 1
mesam
mesam

மேஷம்:- மேஷ ராசிக்காரர்களே நீங்கள் எதிர்ப்புகளைத் தாண்டிமுன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வீட்டை விரிவுபடுத்துவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரைசேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

risapam
risapam

ரிஷபம்:- ரிஷப ராசிக்காரர்களே குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்

mithunam
mithunam

மிதுனம்:- மிதுன ராசிக்காரர்களே கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கேட்டஇடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

kadakam
kadakam

கடகம்:- கடகம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும்.நெருங்கியவர்களிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள்.  வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுங்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

simmam
simmam

சிம்மம்:- சிம்ம ராசிக்காரர்களே குடும்பத்தினருடன் வீண்விவாதம் வந்து போகும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உறவினர் நண்பர்களிடம் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சினைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.

kanni
kanni

கன்னி:- கன்னி ராசிக்காரர்களே குடும்பத்தில்  ஒற்றுமை  பிறக்கும். எதார்த்தமாக பேசி கவர்வீர்கள்.பூர்வீக சொத்துப் பிரச்சினை ஒன்று தீரும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். நல்லன நடக்கும் நாள்.

thulam
thulam

துலாம்:- துலாம் ராசிக்காரர்களே தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன் பிறந்தவர்களால் பயனடைவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புகழ் கௌரவம் கூடும் நாள்

scorpio 08
scorpio 08

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களே குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். புதிய சிந்தனைகள் தோன்றும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். உற்சாகமான நாள்.

thanu
thanu

தனுசு-: தனுசு ராசிக்காரர்களே சந்திராஷ்டமம் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படும். நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

magaram
magaram

மகரம்:- மகர ராசிக்காரர்களே பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நம்பிக்கை துளிர்விடும்நாள்.

kumpam
kumpam

கும்பம்:- கும்பம் ராசிக்காரர்களே குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புது பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சிலநுணுக் கங்களை கற்றுக் கொள்வீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

meenam
meenam

மீனம்:- மீனம் ராசிக்காரர்களே குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சி மேற்கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைகண்டறிவீர்கள். அக்கம் பக்கம்வீட்டாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.