இன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமைந்திருக்கு!

r
r
mesam
mesam

மேஷம்:- மேஷ ராசிக்காரர்களே வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில்  தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

risapam
risapam

ரிஷபம்:-ரிஷப ராசிக்காரர்களே பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் வேலைகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

mithunam
mithunam

மிதுனம்:- மிதுன ராசிக்காரர்களே குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். விருந்தினர்களின் வருகையால் வீடுகளைக் கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். நினைத்தது நிறைவேறும் நாள்

kadakam
kadakam

கடகம்:- கடக ராசிக்காரர்களே கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தோற்றப் பொலிவு கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். நல்லது நடக்கும் நாள்.

simmam
simmam

சிம்மம்:- சிம்ம ராசிக்காரர்களே  ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மன இறுக்கங்கள் அதிகரிக்கும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்

kanni
kanni

கன்னி:- கன்னி ராசிக்காரர்களே எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரியங்களையும் போராடி முடிக்க வேண்டி வரும். எதிர்பாராத பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

thulam
thulam

துலாம்-:துலாம் ராசிக்காரர்களே எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பிள்ளைகள் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். சிந்தனை திறன் பெருகும் நாள்.

scorpio 08 1
scorpio 08 1

விருச்சிகம்:- விருச்சிக ராசிக்காரர்களே கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதித்துக் காட்டும் நாள்.

thanu
thanu

தனுசு:-தனுசு ராசிக்காரர்களே கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய சிந்தனைகள் தோன்றும். விருந்தினர் வருகை உண்டு. உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

magaram
magaram

மகரம்:-மகர ராசிக்காரர்களே சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடாதீர்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். முன் கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

kumpam
kumpam

கும்பம்:- கும்ப ராசிக்காரர்களே கடினமான காரியங்களையும் சுலபமாக முடிப்பீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். தாயார் ஆதரித்து பேசுவார். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

meenam
meenam

மீனம்:-மீன ராசிக்காரர்களே சாதுரியமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.