இன்றைய நாள்(11.11.2020) உங்களுக்கு எப்படி?

download 1 10
download 1 10

மேஷம்

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.

ரிஷபம்

பால்ய நண்பர்கள் ஒருவரை சந்திப்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மிதுனம்

தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.

கடகம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல் கோபம் யாவும் நீங்கி மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மாற்றங்கள் ஏற்படும் நாள்.

சிம்மம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

கன்னி

எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவாக பேசுங்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுகஎதிர்ப்புகள் வந்து நீங்கும்.அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

துலாம்

எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். நம்பிக்கைக்குரிய ஒருவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் விரும்பிவருவார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். சிறப்பான நாள்.

விருச்சிகம்

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உறவினர், நண்பர்களால் நன்மை உண்டு. உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

தனுசு

இதுவரை இருந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பழைய பிரச்சினைகளுக்கு புதிய முறையில் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மகரம்

சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. நன்றி மறந்த சிலரை நினைத்து வருத்தம் அடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுங்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.

கும்பம்

சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை மதிப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.

மீனம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் பாராட்டும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.