இன்று சந்திராஷ்டமம் ஆட்டிப்படைக்கப் போகும் ராசிக்காரா் நீங்களா?

y
y
mesam
mesam

மேஷம்:-மேஷ ராசிக்காரா்களே உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டி இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம் . விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

risapam
risapam

ரிஷபம்:-ரிஷப ராசிக்காரா்களே எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாகமுடியும். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்பை ஏற்பீர்கள். நட்பால் ஆதாயம் அடையும் நாள்.

mithunam
mithunam

மிதுனம்:- மிதுன ராசிக்காரா்களே குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். புது பொருள் வந்து சேரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். காரியம் சித்தியாகும் நாள்.

kadakam
kadakam

கடகம்: -கடக ராசிக்காரா்களே குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள் .

simmam
simmam

சிம்மம்:-சிம்ம ராசிக்காரா்களே முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். மகளுக்கு நல்லவரன் அமையும். புது வேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்ப்படும். நட்பு வட்டம் விரியும்.வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

kanni
kanni

கன்னி:-கன்னி ராசிக்காரா்களே குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

thulam
thulam

துலாம்:- துலாம் ராசிக்காரா்களே கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். தோற்றப்பொலிவு கூடும். வராது என்றிருந்தபணம் கைக்கு வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்

scorpio 08 2
scorpio 08 2

விருச்சிகம்:- விருச்சிக ராசிக்காரா்களே ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்றுமுடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

thanu
thanu

தனுசு:- தனுசு ராசிக்காரா்களே கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். பழைய கடனைத் தீர்க்க
முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுகஎதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.

magaram
magaram

மகரம்:–மகர ராசிக்காரா்களே குடும்பத்தாரின் ஒத்துழைப்புஅதிகரிக்கும். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் விஐபிகள்வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிக்கு ஆலோசனை தருவீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

kumpam
kumpam

கும்பம்: -கும்ப ராசிக்காரா்களே சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர் நண்பர்களால் அனுகூலம் உண்டு. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சியால் முன்னேறும் நாள்.

meenam
meenam

மீனம்:-மீன ராசிக்காரா்களே சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும்.கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்தவர்கள் வலிய வந்து பேசு
வார்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்