செவ்வாழையில் உள்ள சத்துக்கள் மற்றும் அதனால் நமக்கு உண்டாக்கும் நன்மைகள்!

Red Banana Sevvazhai
Red Banana Sevvazhai

உடலுக்கு நன்மை தருவனவற்றில் பழங்களும் ஒன்று.எல்லாக் காலங்களிலும் கிடைக்கக்கூடிய பழங்கள் என்றால் அது வாழைப்பழம்தான்.

வாழை பழங்களில் பூ வாழை,மொந்தை வாழை,பேயன் வாழை,கற்பூரவல்லி, ரஸ்தாளி, பச்சை வாழை என பல வகை உண்டு. அவற்றில் ஒன்று செவ்வாழை.

செவ்வாழை சிவப்பு நிறத்தில் பார்க்கவே அழகாக இருக்கும்.செவ்வாழை உடல் ஆரோகியதிர்க்கும் அழகை சேர்ப்பதில் பெரும் பங்காற்றுகிறது.

செவ்வாழையின் சத்துக்கள்:

இப்பழத்தில் பீட கரோட்டின் மற்றும் ,வைட்டமின் சி அதிகமாக உள்ளது.மற்ற பழங்களை விட இதில் கலோரிகளும் குறைவாகவே உள்ளது.

இதில் பொட்டாசியம், புரதம்,ஆன்டிஆக்ஸிடெண்ட்ஸ் போன்ற பலவிதமான சத்துக்களும் நிறைந்துள்ளன.

செவ்வாழையின் பயன்கள்:

1.இரத்த அணுக்களின் குறைபாடுகளை சரிசெய்கிறது.

2.உடலில் இருக்கும் நோய் தோற்றுகளை அழிக்க வல்லது.

3.கண் பார்வையை கூர்மை ஆக்குகிறது.

4.சருமத்துக்கு நல்ல மினுமினுப்பை கொடுக்கும்.

5.நரம்புகள் வலு பெற்று ஆண்மை குறைபாட்டை நீக்குகிறது.

6.இரத்தத்தை சுத்தீகரித்து தூய்மை ஆக்குகிறது.ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது.

7.பல் சம்பந்தமான அனைத்து குறைபாடுகளையும் சரி செய்கிறது.